மாருதி சுசுகி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம்.. 60 நாள் கெடு! காரணம் இதுதானாம்! CCI imposes Rs 200 crore fine on Maruti Suzuki
Author: Hemalatha Ramkumar24 August 2021, 12:26 pm
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனத்துக்கு Competition Commission of India என்று அழைக்கப்படும் இந்திய போட்டி ஆணையம் 200 அபராதம் விதித்துள்ளது. அதோடு இந்த அபராத தொகையைச் செலுத்த 60 நாட்கள் கெடு விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
மாருதி சுசுகிக்கு நிறுவனத்துக்கு CCI அபராதம் விதிக்க காரணம் என்ன? இதற்கு பின்னணியில் இருக்கும் புகார்கள் என்ன? விரிவாக பார்க்கலாம் வாங்க.
மாருதி சுசுகி நிறுவனத்தின் மீது கடந்த 2019 ஆண்டு முதலே இந்திய போட்டி ஆணையத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது. அந்த புகார்களின் படி, மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், தள்ளுபடி கட்டுப்பாட்டுக் கொள்கையை (Discount Control Policy) விதித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறுத்த தனது டீலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது.
இதனால் மாருதி சுசுகியின் டீலர்கள், தங்கள் நுகர்வோருக்கு தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க முடியாமல் போனது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மாருதி சுசுகி நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிக அளவிலான கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 2 கார்களில் ஒன்று மாருதி சுசுகி என்று தகவல்கள் சொல்கின்றன.
அப்படி இருக்கையில், மாருதி சுசுகி நிறுவனம் இது போன்ற தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கையை விதிப்பதன் காரணமாக நுகர்வோருக்கு பல சலுகைகள் கிடைக்காமல் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
இந்த புகார் குறித்து இந்திய போட்டி ஆணையம், மாருதி சுசுகி நிறுவனத்திடம் விசாரித்தபோது, நிறுவனம் அப்படி எந்தவொரு கட்டுப்பாட்டுக் கொள்கையையும் விதிக்கவில்லை என்று வாதாடியது. டீலர்கள் அவர்கள் விரும்பும் சலுகைகளை கொடுக்க சுதந்திரம் கொடுப்பதாகவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், மாருதி சுசுகி நிறுவன அதிகாரிகளுக்கும் டீலர்களுக்கும் இடையேயான மின்னஞ்சல்களை CCI ஆராய்ந்ததில், டீலர்களிடம், அந்நிறுவனம் தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கையை பின்பற்ற கோரி நிர்பந்தம் செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, டீலர்களை மாருதி சுசுகி நிறுவனம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்பதை கண்டறிந்ததை அடுத்து, இந்தியப் போட்டி ஆணையம் (CCI) MSIL நிறுவனப்படுத்க்கு ரூ.200 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராத தொகையை 6 மாத காலத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0
0