சும்மா தாறுமாறு விலையில் சுத்தமான தங்கத்திலேயே ஐபோன் 12! முழு விவரம் அறிய கிளிக் செய்க

8 August 2020, 7:13 pm
Check Out This “Pure Gold” iPhone 12 From Caviar
Quick Share

5ஜி சிக்கல்களால் ஆப்பிள் வரவிருக்கும் ஐபோன் 12 போனின் வெளியீட்டை  தாமதப்படுத்தி வருவதாகக் கூறப்பட்டாலும், “சைபர்ஃபோனை” கொண்டு வந்த ஆடம்பர-வகுப்பு ஐபோன்-மாற்றியமைக்கும் நிறுவனமான கேவியர், தூய தங்கத்தினால் ஆன ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

இந்த போன்கள் இப்போது முன்பதிவு செய்ய கிடைக்கின்றன. தங்கம் விலை எகிறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நிறுவனத்தின் சைபர்போனுக்கான $15,000 விலையை விட இந்த ஐபோனின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது.

ரஷ்யாவை தளமாகக் கொண்ட தனிப்பயன் ஐபோன் தயாரிப்பாளர்கள் உண்மையில் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து தரமான ஐபோன்களை வாங்குகிறார்கள். அவற்றை வாங்கியப் பிறகு தங்கம், டைட்டானியம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் சொந்த படைப்பாற்றலுடன் ஐபோனின் கேசிங்கை மாற்றுகிறார்கள்.

இப்போது, இந்த ​​ரஷ்ய நிறுவனம் தங்கள் ஐபோன் 12 மாடல்கள் அக்டோபரிலிருந்து விநியோகத்தைத் தொடங்கும் என்று கூறுகிறது. இருப்பினும், ஆப்பிள் ஏற்கனவே தாமதமான ஐபோன் 12 வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தினால், கேவியரின் வெளியீட்டுத் தேதிகளும் எதிர்காலத்தில் மாறக்கூடும்.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கப்போனால், கேவியரின் ஐபோன் 12 ப்ரோ விக்டரி தூய தங்கம் (Caviar iPhone 12 Pro Victory Pure Gold) அடிப்படையில் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் ஒரு விலையுயர்ந்த ஆபரணமாகவே பார்க்கப்படுகிறது. பின்புறத்தில் உள்ள முழுமையான கேசிங்கும் சில சிக்கலான வடிவமைப்புகளுடன் தூய தங்கத்தால் ஆனது.

“கேவியர் ஐபோன் 12 ப்ரோ விக்டரி தூய தங்கம் ஆடம்பரத்தின் உண்மையான அழகை அனுபவிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என்று நிறுவனம் கூறுகிறது.

ஏற்கனவே நமக்குத் தெரிந்தபடி, சிறந்த ஆடம்பரத்துடன் வந்தாலே கண்டிப்பாக விலையும் தாறுமாறாகத் தான் இருக்கும். அதுவும் கேவியர் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பற்றி கேட்கவா வேண்டும். அவற்றின் தூய தங்க ஐபோன் 12 புரோ மற்றும் புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டும் கேவியர் நிறுவனத்தின் விலை நிர்ணயத்துக்கு விதிவிலக்குகள் அல்ல.

அடிப்படை மாடலுக்கான விலை, $23,380 (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.17,51,860) முதல் தொடங்கி 512 ஜிபி ஐபோன் 12 புரோ மேக்ஸுக்கு, $24,540 (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.18,38,780) வரை செல்கிறது.

நீங்களும் ஆடம்பரத்தை விரும்புவோராகவும், செல்வந்தராகவும் இருந்தால் கேவியரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து உங்களுக்கான சாதனத்தை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்க.

Views: - 18

0

0