மணிக்கு 600 கிமீ வேகத்தில் மிதந்து செல்லும் ரயில் | சீனாவின் வினோதமான புதிய அறிமுகம்! | China Unveils Maglev Train

21 July 2021, 8:28 am
China Unveils New Maglev Train
Quick Share

Magnetic Levitation எனும் காந்த மிதத்தல் தொழில்நுட்ப உதவியுடன் மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புதிய ரயிலை சீனா செவ்வாய்க்கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகபட்சமாக மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில், சீனாவின் கடலோர நகரமான கிங்டாவோவில் தயாரிக்கப்படுகிறது, இது உலகளவில் அதிவேக தரைவழி வாகனம் என்ற பெருமையை அடைந்துள்ளது.

மின்-காந்த சக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படும் இந்த ரயில் தரைக்கும் ரயிலுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் தண்டவாளத்தின் மீது மிதக்கக்கூடியது.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக சீனா இந்த தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்துகிறது. ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு மட்டுமே இந்த ரயில் சேவை பயன்படுத்தப்படுகிறது.

சீனாவில் இன்னும் அதிக அளவில் இந்த அதிவேக ரயில் சேவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஷாங்காய் மற்றும் செங்டு உள்ளிட்ட சில நகரங்கள் இதற்கான ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில், பெய்ஜிங்கிலிருந்து 1,000 கி.மீ (620 மைல்) க்கும் அதிகமான தொலைவில் உள்ள ஷாங்காய் நகருக்கு 2.5 மணிநேரத்திற்குள் சென்றுவிடும்.

இதுவரை உள்ள அதிவேக சேவைகளுடன் ஒப்பிடுகையில், இந்த பயணத்திற்கு விமானத்தில் 3 மணிநேரமும் அதிவேக ரயிலில் 5.5 மணி நேரமும் ஆகும். ஆனால், இந்த புதிய நவீன அதிவேக ரயிலில் அதைவிட முன்கூட்டியே சென்றுவிட முடியும்.

ஜப்பானில் இருந்து ஜெர்மனி வரையிலான நாடுகளும் மேக்னெடிக் லெவிட்டேஷன் உடன் ரயில் பாதைகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் அதிக செலவுகள் மற்றும் தற்போதைய பாதையின் உள்கட்டமைப்பு அதிவேக ரயிலுக்கு பொருந்தாத தன்மைக் காரணமாக விரைவான வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன.

Views: - 89

0

0

Leave a Reply