வாகனங்கள் ஏன் பெட்ரோல் டீசலில் மட்டுமே இயங்குகிறது?

Author: Dhivagar
2 October 2020, 8:24 pm
Click here to know why vehicles run on petrol or diesel only
Quick Share

எந்தவொரு வாகனத்தையும் இயக்க பெட்ரோல் அல்லது டீசல் ஏன் தேவைப்படுகிறது, தண்ணீரைப் பயன்படுத்தி ஏன் வாகனங்களை இயக்க முடியவில்லை என்பது பெரும்பாலும் நமக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி என்றே சொல்லலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த கேள்விக்கான பதில் தெரியாது. இன்றுவரை, தண்ணீரில் ஓடக்கூடிய வணிக ரீதியான வாகனம் என்று எதுவுமே இல்லை. அதற்கான காரணத்தையும், விளக்கத்தையும் பார்க்கலாம் வாங்க.

பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டும் பெட்ரோலிய பொருட்கள். பெட்ரோலிய எரிபொருள் ஹைட்ரோகார்பன்களால் ஆனது. ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகள் பெரும்பாலும் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் ஆக்ஸிஜன் போன்ற வேறு சில கூறுகளையும் கொண்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஹைட்ரோகார்பன்களின் பயன்பாடு ஆற்றலை உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில், மனிதர்களும் நெருப்பைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தனர். ஹைட்ரோகார்பன்களைப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொண்டனர். பெட்ரோலியம் பொருட்களைப்  பயன்படுத்துகையில்  இயந்திரங்கள் அதிக அளவில் அதிக ஆற்றலை உற்பத்தி செய்து வேலைகளைச் செய்கின்றன என்பதை  அறிந்துக்கொண்டனர்.

இது தண்ணீரில் சாத்தியமில்லையா? தண்ணீரின் வேதியியல் செயல்முறை எதுவும் இல்லை. ஆற்றலை உருவாக்க எரிபொருளைப் போல தண்ணீரைப் பயன்படுத்த முடியாது. நீர் சூடான பிறகு நீராவியாக மாறும் போது, ​​அது நிச்சயமாக ஆற்றலை உற்பத்தி செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், தண்ணீரை சூடாக்க தனியே எரிபொருள் நமக்குத் தேவைப்படுகிறது. இதனால் நமக்கு கூடுதல் செலவு ஆகும். எனவே, தண்ணீரில் ஓடும் வாகனங்களும் சாத்தியம் தான். ஆனால், விலையையும் எரிபொருளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில்  பெட்ரோலியம் எரிபொருள் தான் சிறப்பானதாக உள்ளது. 

பல நிறுவனங்கள் தாங்கள் தண்ணீரில் ஓடும் காரைத் தயாரித்ததாகக் கூறினாலும், அவை இன்னும்  வணிக ரீதியாக மாற்றப்படவில்லை என்பதே உண்மை.

Views: - 88

1

0