உலகெங்கும் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிளப்ஹவுஸ் மிக மிக விரைவில்! வெளியானது தகவல்

17 May 2021, 11:13 am
Clubhouse for Android to roll out globally this week
Quick Share

இந்த வாரம் உலகளவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கிளப்ஹவுஸ் ஆப் வெளியாகும் என்று கிளப்ஹவுஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது iOS பயன்பாட்டில் கிடைப்பது போன்ற அம்சத்துடன் ஆன்ட்ராய்டு பயன்பாட்டையும் உருவாக்கி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஆன்ட்ராய்டு பயன்பாட்டின் பீட்டா பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

டெக் க்ரஞ்ச் அறிக்கையின்படி, கிளப்ஹவுஸ் ஆண்ட்ராய்டு பயன்பாட்டை ஜப்பான், ரஷ்யா மற்றும் பிரேசிலில் செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற பிற சந்தைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு ஆன்ட்ராய்டு பயன்பாட்டைப் பெறும், அதைத் தொடர்ந்து உலகளவில் வெளியீடப்படும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான விரிவாக்கத்தின் மூலம் கிளப்ஹவுஸ் பயன்பாட்டிற்கு அதிக பயனர்கள் கிடைப்பார்கள். கிளப்ஹவுஸ் கடந்த ஆண்டு iOS ஆப் ஆக மட்டும் வெளியானது. ஆடியோ-மையப்படுத்தப்பட்ட இந்த பயன்பாடு எலோன் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட பல பிரபலங்களையும் கவர்ந்தது. இந்த இயங்குதளம் iOS க்கு மட்டுமே பிரத்தியேகமாக இருந்தபோதிலும், இப்போது வரை இதான் பிரபலம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

கிளப்ஹவுஸ் புகழ்பெற்றதை அடுத்து பேஸ்புக், ட்விட்டர், ஸ்பாடிஃபை மற்றும் ரெடிட் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் தளங்களில் இது போன்ற ஒரு அம்சத்தைச் சேர்க்க துவங்கியுள்ளனர்.

Views: - 133

0

0