ஒன்பிளஸ் 8T அறிமுகமாவதற்கு முன்னதாக இணை நிறுவனர் கார்ல் திடீர் விலகல் | காரணம் இதுதானா?

Author: Dhivagar
13 October 2020, 3:39 pm
OnePlus co-founder Carl Pei has reportedly left the company to start his own venture and is currently looking for investors to raise capital. Pete Lau was also appointed to look after the product development and planning for Oppo, Realme and OnePlus.
Quick Share

ஒன்பிளஸ், கடந்த 2013 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உலகில் நுழைந்தது, முக்கியமாக பீட் லாவ் மற்றும் கார்ல் பெய் ஆகிய 2 பேர் ஆகியோரின் முயற்சியால் இது உருவானது. ரெடிட் பயனரான ஜோன்சிகரின் தகவலின்படி, கார்ல் பெய் ஒன்பிளஸ் நிறுவனத்தில் இருந்து விலகியதாக தெரியவந்துள்ளது.

டெக் க்ரஞ்சின் சமீபத்திய தகவல்களின்படி, ஒன்பிளஸின் இணை நிறுவனர் கார்ல் பெய் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்க நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. 

நிறுவனத்தின் சமீபத்திய சாதனமான ஒன்பிளஸ் 8T அறிமுகமாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த தகவல் வருகிறது. ஆதாரங்களின்படி, நவம்பர் மாதத்தில் கார்ல் தனது பதிவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்திருந்தார், ஆனால் நோர்ட் சீரிஸ் வெளியாகும் வரை நிறுவனத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

நிறுவனத்தில் இருந்து கார்ல் வெளியேறியதற்கான சரியான காரணம் அவர் நிறுவனம் தொடங்குவதுதானா என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்பிளஸ் பல பிரிவுகளில் நுழைவதில் அவருக்கு விருப்பமில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ், கார்ல் பெய் மற்றும் பீட் லாவ் ஆகியோர்களில் யாரும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. ரெடிட் பயனரின் கசிந்த ஆவணங்கள், இந்தியாவில் செயல்பாடுகளின் பொறுப்பில் இருக்கும் எமிலி டேய், உலகளவில் நோர்ட் தயாரிப்பு வரிசையின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறுகிறது. 

Views: - 166

0

0