உஷார்…உஷார்…..கொரோனா உஷார்…! கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்…..எச்சரிக்கை மக்களே!!!

26 March 2020, 8:53 pm
COVID-19 related phishing attacks up by massive 667%: Report
Quick Share

பிப்ரவரி மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 தொடர்பான மின்னஞ்சல் தாக்குதல்களின் எண்ணிக்கை 667 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. தீம்பொருளை (malware) விநியோகிப்பதற்கும், தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கும், மோசடி செய்து பணம் பெறுவதற்கும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தை பயன்படுத்தி நவீன திருடர்கள் திருடுகின்றனர். கிளவுட்-இயக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு தீர்வுகளின் முன்னணி வழங்குநரான பார்ராகுடா நெட்வொர்க்குகளின் (Barracuda Networks) அறிக்கை தெரிவிக்கிறது.

இது போன்ற மோசடி தாக்குதல்கள் வழக்கமாக காணப்படும் பொதுவான ஃபிஷிங் தந்திரங்களையே பயன்படுத்துகின்றன. பெருகிவரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களில் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் பொது மக்கள் தடுமாறி போகின்றனர். 

மார்ச் 1 முதல் மார்ச் 23 வரை, பார்ராகுடா ஆராய்ச்சியாளர்கள் 467,825 ஸ்பியர்-ஃபிஷிங் மின்னஞ்சல் தாக்குதல்களைக் கண்டறிந்துள்ளனர், மேலும் 9,116 கண்டறிதல்கள் COVID-19 உடன் தொடர்புடையவை, இது சுமார் 2 சதவீத தாக்குதல்களைக் குறிக்கிறது.

ஒப்பிடுகையில், பிப்ரவரியில் மொத்தம் 1,188 கொரோனா வைரஸ் தொடர்பான மின்னஞ்சல் தாக்குதல்கள் கண்டறியப்பட்டன, ஜனவரி மாதத்தில் வெறும் 137 தாக்குதல்கள் மட்டுமே கண்டறியப்பட்டன. மற்ற அச்சுறுத்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த தாக்குதல்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்தாலும், அச்சுறுத்தல் விரைவாக வளர்ந்து வருகிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் கோவிட்-19 கருப்பொருள்களைப் பயன்படுத்தி மூன்று முக்கிய வகை ஃபிஷிங் தாக்குதல்களைக் கண்டதாக பார்ராகுடா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர் –

  • மோசடி (scamming),
  • பிராண்ட் ஆள்மாறாட்டம் (brand impersonation) மற்றும்
  • வணிக மின்னஞ்சல் சமரசம் (business email compromise).

மார்ச் 23 ஆம் தேதி வரை பார்ராகுடா சென்டினல் கண்டறிந்த கொரோனா வைரஸ் தொடர்பான தாக்குதல்களில், 54 சதவீதம் – மோசடிகள், 34 சதவீதம் – பிராண்ட் ஆள்மாறாட்டம் தாக்குதல்கள், 11 சதவீதம் – பிளாக் மெயில் மற்றும் 1 சதவீதம் – வணிக மின்னஞ்சல் சமரசம். எனவே அதிகாரப்பூர்வமாக தளங்கள் மற்றும் தகவல்களையே பாருங்கள், படியுங்கள், பகிருங்கள்.