டெல் ஏலியன்வேர், XPS மற்றும் G15 லேப்டாப்புகள் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
27 August 2021, 4:44 pm
Dell launches new Alienware, XPS, and G15 laptops in India
Quick Share

உலகளவில் பிரபலமான லேப்டாப் பிராண்டான டெல் இந்தியாவில் புதிய ஏலியன்வேர் x15 R1, ஏலியன்வேர் x17 R1 மற்றும் G15 மாடல்களுடன் புதிய XPS 15 மற்றும் XPS 17 லேப்டாப் மாடலைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வரிசையின் ஆரம்ப விலை ரூ.82,990 முதல் தொடங்குகிறது. G15 தொடர் செப்டம்பர் 23 முதல் வாங்குவதற்கு கிடைக்கும், மற்ற சாதனங்கள் செப்டம்பர் 3 முதல் கிடைக்கும்.

டெல் G15 லேப்டாப் – ரூ.82,990 முதல் விலைகள் ஆரம்பம்

Dell launches new Alienware, XPS, and G15 laptops in India

டெல் G15 லேப்டாப் 120 Hz, 15.6 இன்ச் முழு HD LED-பேக்லிட் டிஸ்பிளே, 720p வெப்கேம் மற்றும் இரட்டை வரிசை மைக்ரோஃபோன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது 11 வது தலைமுறை இன்டெல் கோர் i7-10800H அல்லது AMD ரைசன் 7 5800H செயலிகள் உடன் இயக்கப்படுகிறது மற்றும் 56Wh அல்லது 86Wh பேட்டரியை பேக் செய்கிறது.

இந்த சாதனம் NVIDIA GeForce RTX 3060 கிராபிக்ஸ், 32 ஜிபி RAM மற்றும் 2 TB ஸ்டோரேஜ் ஆகியவற்றை வழங்கும்.

டெல் XPS 15 – ரூ.2,23,990 முதல் விலைகள் ஆரம்பம்

Dell launches new Alienware, XPS, and G15 laptops in India

டெல் XPS 15 15.6 இன்ச் 4K டச் டிஸ்பிளே உடன் 500-நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது.

இது 11 வது தலைமுறை இன்டெல் கோர் i9-11900H செயலி மூலம் இயக்கப்படுகிறது, NVIDIA GeForce RTX 3050 Ti GPU, 32GB RAM வரை, மற்றும் 1TB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது 86Wh பேட்டரி, குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்களைக் கொண்டுள்ளது.

டெல் ஏலியன்வேர் x15 R1 – ரூ.2,40,990 முதல் விலைகள் ஆரம்பம்

Dell launches new Alienware, XPS, and G15 laptops in India
  • டெல் ஏலியன்வேர் x15 R1 லேப்டாப் 360 Hz, 15.6 இன்ச் டிஸ்பிளே, 1080p ரெசல்யூஷன் கொண்டது. இது எலிமென்ட் 31 எனப்படும் ‘thermal interface material’ ஐ பயன்படுத்துகிறது, இது வெப்ப எதிர்ப்பில் 25% முன்னேற்றம் அளிக்கிறது.
  • மடிக்கணினி இன்டெல் கோர் i9-11900H செயலி, NVIDIA GeForce RTX 3080 GPU, 32GB வரை RAM, 1TB ஸ்டோரேஜ் மற்றும் 87Wh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும்.

டெல் XPS 17 – ரூ.2,64,490 முதல் விலைகள் ஆரம்பம்

Dell launches new Alienware, XPS, and G15 laptops in India
  • டெல் XPS 17 லேப்டாப் 17-இன்ச் 4K டச் டிஸ்ப்ளே 500-நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் டிஸ்பிளேவுக்கு HDR 400 சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
  • இது 11 வது தலைமுறை இன்டெல் கோர் i9-11980HK செயலியில் இருந்து ஆற்றலை ஈர்க்கிறது, NVIDIA GeForce RTX 3060 GPU, 32GB வரை RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இது 97Wh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.1 இணைப்பை ஆதரிக்கிறது.

ஏலியன்வேர் x17 R1 – ரூ.2,90,990 முதல் விலைகள் ஆரம்பம்

Dell launches new Alienware, XPS, and G15 laptops in India
  • ஏலியன்வேர் x17 R1 லேப்டாப்கள் 1080p ரெசல்யூஷன் மற்றும் 360 Hz புதுப்பிப்பு வீதத்துடன் 17.3 அங்குல திரையைக் கொண்டுள்ளது. X15 R1 ஐப் போலவே, இது மேம்படுத்தப்பட்ட வெப்ப செயல்திறனுக்கான Element 31 பொருளையும் கொண்டுள்ளது.
  • இந்த லேப்டாப் இன்டெல் கோர் i9-11980HK சிப்செட், என்விடியா NVIDIA RTX 3080 GPU, 32 ஜிபி RAM வரை, 1 TB ஸ்டோரேஜ் மற்றும் 87Wh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

Views: - 357

0

0