உலகிலேயே மிக மெல்லிய டெல் ஸ்லிம் சவுண்ட்பார் இந்தியாவில் அறிமுகம்! விலை, அம்சங்கள் & விவரங்கள்

9 October 2020, 11:17 am
Dell Slim Soundbar SB521A Launched in India
Quick Share

டெல் அதன் உயர்நிலை மானிட்டர்களில் சிலவற்றிற்கான துணைப் உபகரணமாக இந்தியாவில் புதிய சவுண்ட்பாரை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘டெல் ஸ்லிம் சவுண்ட்பார் SB521A’ என அழைக்கப்படும் இந்த சாதனம் “உலகின் மெலிதான மற்றும் இலகுவான சவுண்ட்பார்” என விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது நிறுவனத்தின் நான்கு வெவ்வேறு உயர்நிலை மானிட்டர்களுடன் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெல் ஸ்லிம் சவுண்ட்பார் SB521A அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்

டெல் ஸ்லிம் சவுண்ட்பார் SB521A சக்திவாய்ந்த 3.6W RMS ஸ்பீக்கர்கள் 180Hz முதல் 20kHz வரை பரந்த அதிர்வெண் மறுமொழி வரம்பைக் கொண்டுள்ளது. இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்கான ஒருங்கிணைந்த ஆம்ப்லிஃபையர் உடன் வருகிறது. 

நிறுவனம் கூறு/கையில், இந்த சாதனம் மேற்கூறிய டெல் மானிட்டர்களில் காந்தமாக இணைந்து, பயனர்கள் எந்த திசையிலும் பேனல்களை சாய்க்கவும், சுழற்றவும், முன்னிலைப்படுத்தவும் உதவுகிறது. யூ.எஸ்.பி கேபிளைப் பயன்படுத்தி மானிட்டர்களின் யூ.எஸ்.பி-A போர்ட்டுகளுடன் இதை இணைக்க முடியும்.

டெல் ஸ்லிம் சவுண்ட்பார் SB521A அல்ட்ராஷார்ப் U2421E 24 யூ.எஸ்.பி-C மானிட்டர், P2721Q 27 4K யூ.எஸ்.பி-C மானிட்டர், P3221D 32 யூ.எஸ்.பி-C மானிட்டர் மற்றும் P3421W 34 வளைந்த யூ.எஸ்.பி-C மானிட்டருடன் இணக்கமானது. 

இது ஒரு உள்ளமைக்கப்பட்ட காந்த மவுண்ட்டுடன் வருகிறது, இது மேற்கூறிய எந்த டிஸ்பிளேகளிலும் இணைக்கப் பயன்படுகிறது. இந்த சாதனத்துடன் வரும் கூடுதல் பாதுகாப்பு சங்கிலி மற்றும் வெளிப்புற பூட்டுடனும் இது பூட்டப்படலாம். டெல் தயாரிப்புக்கு 3 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

டெல் ஸ்லிம் சவுண்ட்பார் SB521A விலை மற்றும் கிடைக்கும் நிலவரம் 

டெல் ஸ்லிம் சவுண்ட்பார் SB521A ஜிஎஸ்டி உட்பட இந்தியாவில் 4,899 ரூபாய் விலைக் கொண்டது. இது ஏற்கனவே டெல் இந்தியா இணையதளத்தில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது, மேலும் 1-2 வாரங்களில் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சவுண்ட்பாருக்கான அமேசான் US பட்டியல் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியிடப்படும்.

Views: - 53

0

0