உங்கள் அடையாளத்தில் வேறு யாராவது மொபைல் எண் வச்சிருக்காங்களா? எப்படி கண்டுபிடிப்பது?

21 April 2021, 6:00 pm
Department of Telecommunications (DoT) lanuches a portal to check number
Quick Share

தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒரு போர்ட்டலை (https://www.tafcop.dgtelecom.gov.in) அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் மூலம் பயனர்கள் தங்கள் பெயரின் பேரில் எத்தனை மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு நபரும் ஒன்பது மொபைல் இணைப்புகளை மட்டுமே பெற முடியும் என்று தொலைத்தொடர்பு துறையின் துணை இயக்குநர் ஜெனரல் A. ராபர்ட் ரவி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், குறிப்பிட்ட நபர்களின் பெயர்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் செயலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பலருக்கும் அது குறித்து தெரிவதே இல்லை. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி உதவ, தொலைத் தொடர்புத் துறை (DoT) ஒரு ஆன்லைன் போர்ட்டலை உருவாக்கியுள்ளது. 

பயனர்கள் அந்த போர்ட்டலுக்குச் சென்று தாங்கள் பெறாத தேவையில்லாத எண்களைப் புகாரளிக்கலாம். அதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள். பயனர்களுக்கு டிக்கெட் ID கள் வழங்கப்படும், அவை எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனுமதிக்கும். 

மறுபுறம், நெட்வொர்க் சேவை வழங்குநர்கள், வாடிக்கையாளர் கையகப்படுத்தல் படிவத்தை (Customer Acquisition Form – CAF) நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளனர். மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (TAF-COP) போர்ட்டலுக்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் வழங்கிய வசதிகளை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.

  • ஒன்பதுக்கும் மேற்பட்ட பல இணைப்புகளைக் கொண்ட சந்தாதாரர்கள் எஸ்எம்எஸ் அறிவிப்பைப் பெறுவார்கள்.
  • தங்கள் பெயரில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பல இணைப்புகளைக் கொண்ட சந்தாதாரர்கள் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, சந்தாதாரர்கள் “Request Status” பெட்டியில் “Ticket ID Ref No” ஐ உள்ளிடுவதன் மூலம் அதன் நிலையைக் கண்காணிக்க முடியும்.
  • தொலைத்தொடர்புத் துறை (DoT) வாடிக்கையாளர் கையகப்படுத்தல் வழிகாட்டுதல் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் ஒரு சந்தாதாரருக்கு அவரது பெயரில் ஒன்பது மொபைல் இணைப்புகளை பதிவு செய்ய உதவுகின்றன. 

உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை சரிபார்க்கும் வழிமுறைகள்

  • TAF COP Consumer Portal என்ற வலைத்தளத்தைப் பார்வையிட்டு அங்கு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • இப்போது ‘Request OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணில் 6 இலக்க OTP ஐப் பெறுவீர்கள்.
  • இப்போது OTP ஐ உள்ளிட்டு ‘Validate’ என்பதைக் கிளிக் செய்க
  • இப்போது உங்கள் அடையாள சான்றுக்கு வழங்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலைப் பெறுவீர்கள்.
  • உங்களுக்கு சொந்தமில்லாத எண்களை நீங்கள் தேர்ந்தெடுத்து புகாரளிக்க ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யலாம்.

Views: - 591

2

0