அக்டோபர் மாதத்தில் டொயோட்டா கார்களுக்கு எதிர்பாராத வகையில் பல்லாயிரம் ரூபாய் தள்ளுபடி!

Author: Dhivagar
14 October 2020, 5:19 pm
Discounts up to Rs 60,000 on Toyota Yaris, Glanza, and Innova Crysta in October
Quick Share

நாடு முழுவதும் உள்ள ஒரு சில டொயோட்டா டீலர்ஷிப்கள் இந்த மாதத்தில் பல்வேறு மாடல்களில் தள்ளுபடியை வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் ரொக்க தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் நன்மைகளைப் பெறலாம்.

டொயோட்டா யாரிஸ் ரூ.20,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 பரிமாற்ற போனஸ் மற்றும் ரூ.20,000 கார்ப்பரேட் தள்ளுபடி உடன் கிடைக்கிறது. கிளான்சா காரைப் பொறுத்தவரையில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 பரிமாற்ற போனஸ் மற்றும் 5,000 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி உடன் வழங்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவில் தள்ளுபடிகளைப் பொறுத்தவரை ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.30,000 பரிமாற்ற போனஸ் மற்றும் ரூ.20,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். பார்ச்சூனர், அர்பன் க்ரூஸர், வெல்ஃபயர் மற்றும் கேம்ரி ஹைப்ரிட் ஆகியவற்றில் சலுகைகள் எதுவும் இல்லை. அர்பன் குரூசர் காம்பாக்ட் எஸ்யூவியின் விநியோகங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Views: - 66

0

0