மனிதர்கள் வாழ இன்னும் 300 மில்லியனுக்கும் அதிகமான கிரகங்கள் உள்ளது கண்டுபிடிப்பு!!!

9 November 2020, 11:48 pm
Quick Share

நாம் விண்வெளியைப் பார்க்கும்போதெல்லாம், நம் மனதில் பல கேள்விகள் உள்ளன. பூமியைப் போல மனிதர்கள் வாழக்கூடிய கிரகங்கள் வேறு எதுவும் உள்ளதா என்பது தான் அந்த கேள்வி. 

வேற்று கிரக சந்திப்புகளின் பல கூற்றுக்களை பற்றி நாம்  கேள்பட்டிருக்கிறோம். சிலவற்றை நம்புவது கடினம் என்றாலும், சிலவற்றை நம்பி தான் ஆக வேண்டும்.

இப்போது, ​​புதிய ஆராய்ச்சியின் படி, நமது விண்மீன் மண்டலத்தில் குறைந்தது 300 மில்லியன் வாழக்கூடிய கிரகங்கள் இருக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. புதிய ஆய்வு (வானியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது) மில்கிவே கேலக்ஸியில்  உள்ள சூரியனைப் போன்ற பாதிக்கும் மேற்பட்ட  நட்சத்திரங்கள் மனிதர்கள்  வாழக்கூடிய சூழலை  கொண்டிருக்கக்கூடும் என்று கூறுகிறது.

300 மில்லியன் எண்ணிக்கை என்று சொல்வது ஒரு தோராயமான எண்ணிக்கை தான் என்பது நாசாவின் கூற்று. இது இன்னும் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆய்வு கெசலர் பணியில் பணியாற்றிய நாசாவின் விஞ்ஞானிகளுக்கும் பல சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பாகும்.

இந்த தோராயமான மதிப்பீட்டைப் பெறுவதற்காக, நாசா வயது மற்றும் வெப்பநிலையின் அடிப்படையில் நமது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைத் தேடியது. பின்னர் பூமியின் அளவைப் போன்ற எக்ஸோபிளானெட்டுகளைத் தேடியது (பாறை கிரகங்களை நீக்குதல்). இந்த சூரியனில் இருந்து ஒரு கிரகம் எவ்வளவு தூரம் அல்லது நெருக்கமாக உள்ளது என்பதையும் அவர்கள் பார்த்தார்கள்.  

ஒரு கிரகத்தின் வெப்பநிலை மற்றும் ஆற்றலின் பகுப்பாய்வு என்பது  சாத்தியமில்லை. இருப்பினும், ESA இன் கியா மிஷனின் உதவியுடன், அவர்கள் விண்மீன் பற்றிய இன்னும் துல்லியமான படத்தைப் பெற முடியும்.

நாசா விஞ்ஞானியும் ஆய்வு ஆசிரியருமான ரவி கொப்பராபு விளக்குகிறார், “ஒரு நட்சத்திரத்திலிருந்து ஒரு கிரகத்தின் உடல் தூரத்தின் அடிப்படையில் வாழ்விடத்தை வரையறுப்பதை நாங்கள் எப்போதும் அறிந்திருந்தோம்.  அதனால் அது மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லை. எங்களுக்கு நிறைய அனுமானங்களை ஏற்படுத்தியது. நட்சத்திரங்களைப் பற்றிய கியாவின் தரவு எங்களுக்கு பல விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது. இதனால் இந்த கிரகங்களையும் அவற்றின் நட்சத்திரங்களையும் முற்றிலும் புதிய வழியில் பார்க்க முடிந்தது. “

இந்த கிரகங்களில் சில உண்மையில் ஒன்றுக்கொன்று  நெருக்கமாக இருக்கக்கூடும் என்று நாசா கூறுகிறது.  மனிதர்கள்  வாழக்கூடியதாகத் தோன்றும் மிக நெருக்கமான கிரகங்கள்  சுமார் 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

Views: - 15

0

0