மொபைல் சார்ஜ் செய்யும் போது இந்த தவறை செய்யாதீர்கள்! பிறகு வருந்த வேண்டியிருக்கும்!

23 February 2021, 3:13 pm
Do not forget this mistake while doing Mobile Charge, otherwise you may have to repent
Quick Share

இன்றைய காலகட்டத்தில், நாம் அதிக நேரம் மொபைலிலேயே தான் மூழ்கி கிடக்கிறோம். ஆனால், அதிகமாக மொபைலைப் பயன்படுத்தினால் வேகமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடும். உடனே நாம்  சார்ஜ் போடதான் செல்வோம். சார்ஜ் போடுவதில் தவறொன்றுமில்லை, ஆனால் மொபைலைச் சார்ஜ் செய்யும் போது, சில தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். 

அப்படி செய்வதன் மூலம், தொலைபேசியின் பேட்டரி விரைவாக சார்ஜ் ஆகும். எனவே நீங்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

உங்கள் ஸ்மார்ட்போனில் சார்ஜ் குறையாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சார்ஜ் செய்வது பேட்டரிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். எனவே தொலைபேசியின் பேட்டரி 20 சதவீதம் அல்லது குறைவாக இருக்கும்போது மட்டுமே சார்ஜ் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொலைபேசியை விரைவாக சார்ஜ் செய்வதாகக் கூறும் பல ஆப்கள் ஆன்லைனில் இருக்கும். ஆனால் இந்த பயன்பாடுகள் பின்னணியில் இயங்குவதால் கூடுதலாக சார்ஜ் தான் தீருமோ ஒழிய உங்கள் போன் சீக்கிரம் சார்ஜ் ஆகாது. 

உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் சார்ஜர் உடன் மட்டும் தான் சார்ஜ் செய்ய வேண்டும். வேறு ஏதாவது குறைந்த விலையில் வாங்கின சார்ஜர் உடன் நீங்கள் சார்ஜ் செய்தால் பேட்டரியின் லைஃப் குறையக்கூடும்.  அதே போல் தொலைபேசியை எப்போதும் ஒரே சார்ஜருடன் மட்டுமே  சார்ஜ் செய்ய வேண்டும்.

மக்கள் பலரும் தங்கள் தொலைபேசியை கவர் அல்லது பேக்  கேஸ் உடனே சார்ஜ் செய்கின்றனர். ஆனால், அப்படி செய்யக்கூடாது. மொபைல் கவர் அல்லது கேஸ் உடன் சார்ஜ் போடுவது பேட்டரிக்கு அதிக அழுத்தம் கொடுப்பதோடு பேட்டரி செயலிழப்புக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது நீங்கள் சிலிக்கான் கவர் அல்லது பேக் கேஸை அகற்றிவிட வேண்டும்.

Views: - 13

0

0

Leave a Reply