இந்த விஷயத்துல இப்போ இந்தியா தான் டாப்புல இருக்கு தெரியுமா???

29 June 2020, 7:31 pm
Quick Share

உலகெங்கிலும் உள்ள COVID-19 ஊரடங்கு காரணமாக இணைய பயன்பாடானது எல்லா நேரத்திலும் உச்சத்தில் இருந்து வருகிறது. இதுபோன்ற காலங்களில், இந்தியர்கள் ஆன்லைன் வீடியோக்களின் மிகப்பெரிய நுகர்வோராக உருவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து மணி நேரம் பதினாறு நிமிடங்கள் ஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லைம்லைட் நெட்வொர்க்ஸ் இன்க் வழங்கும் புதிய உலகளாவிய அறிக்கை “வீடியோ எவ்வாறு உலகை மாற்றுகிறது” என்ற தலைப்பில் புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்துகிறது. சமூக தொடர்புகள் முதல் கார்ப்பரேட் கூட்டங்கள் மற்றும் ஆன்லைன்  விளையாட்டுக்கள் வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆன்லைன் வீடியோக்கள் பயன்படுத்தப்படுவதற்கான வழிகளை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

அறிக்கையின்படி, கணக்கெடுக்கப்பட்ட இந்தியர்களில் 97.8% பேர் தொற்றுநோய் பரவி வரும் இந்த சமயத்தில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்க வீடியோ சாட்டை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இவற்றில் 65.4 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு பல முறை பயன்படுத்துகின்றனர்.

தொற்றுநோய்களின் போது நேரடி ஸ்ட்ரீம் உரைகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் 91.7 சதவிகித மக்கள் ஆன்லைன் வீடியோவைப் பயன்படுத்தினர். இவற்றில், 70.3 சதவிகிதம் நபர்கள் வெவ்வேறு புதிய தளங்களையும், 21.4 சதவிகிதம் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன.

வேலையைப் பொறுத்தவரை, பங்கேற்பாளர்களில் 93.8 சதவிகிதத்தினர் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைச் செய்ய உதவுவதற்காக ஆன்லைன் வீடியோவை பயன்படுத்துகிறார்கள். இந்திய பயனாளர்களில்  மூன்றில் ஒரு பங்கு (30.8 சதவீதம்) நபர்களுக்கு முதல்முறையாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை  வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் தொழில்முறை திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கு, பாதிக்கும் மேற்பட்ட (67.3 சதவிகிதம்) இந்தியர்கள் தொழில்முறை மேம்பாடு சம்பந்தப்பட்ட ஆன்லைன் வீடியோவை பார்க்கின்றனர். அல்லது புதிய திறமையைக் கற்றுக்கொள்ள பயன்படுத்தி கொள்கின்றனர். பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் (86.2 சதவீதம்) இதுபோன்ற வீடியோ அடிப்படையிலான கற்றல் தொற்றுநோய்க்குப் பின்பும் கூட தொடரும் என்று நம்புகிறார்கள்.

ஊரடங்கு உலகளவில் அனுபவிக்கப்பட்டு வரும்  நிலையில், பல புதிய டிரென்டுகள் ஆன்லைனில்  வலம் வருகின்றன. இந்தியாவில் டெலி-ஹெல்த் வேகமாக அதிகரிப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 45.8 சதவிகித இந்தியர்கள் தங்கள் மருத்துவருடன் ஒரு மெய்நிகர் ஆலோசனையைப் பெற்றனர். உலகளவில், பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு (34.6 சதவீதம்) அடுத்த ஆறு மாதங்களுக்கு இதுபோன்ற டெலி-ஹெல்த் நியமனங்களை நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மற்றொரு சுவாரஸ்யமான டிரென்டாவது இந்திய பயனர்களில் 64.3 சதவிகிதத்தினர் தொற்றுநோய்களின் போது தங்கள் முதல் ஈஸ்போர்ட் (esports) அனுபவம் பெற்றதாகக் கூறினர். அதே போல பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் (68.8 சதவீதம்) பேர் தங்கள் முதல் ஆன்லைன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பற்றி கூறினர்.

ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதால், உடற்பயிற்சியும் ஆன்லைனில் அதிக புகழைப் பெற்றது. 55.6% சதவீத இந்தியர்கள் ஆன்லைன் உடற்பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அடுத்த ஆறு மாதங்களில் அவ்வாறு செய்ய 26.8 சதவீத திட்டம் உள்ளதாக ஒப்பு கொண்டுள்ளனர்.

பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஸ்காண்டிநேவியா, சிங்கப்பூர், தென் கொரியா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த, ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்லைன் வீடியோவைப் பார்க்கும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 5,000 பயனாளர்களிடமிருந்து இந்த பதில்கள் பெறப்பட்டது.