டெலிவரிக்கு மின்சார வாகனங்கள் | ரிவோல்ட் மோட்டார்ஸ் உடன் டோமினோஸ் கூட்டணி!

Author: Dhivagar
27 July 2021, 3:45 pm
Domino's to replace petrol motorcycle fleet with Revolt Motors' RV300 e-bike
Quick Share

பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் விநியோக சேவைக்குப் படிப்படியாக மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இந்த வேளையில் பீட்ஸா டெலிவரி நிறுவனமான டோமினோஸ் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

டோமினோஸ் பீட்ஸா தனது டெலிவரிகளுக்குப் பயன்படுத்தும் தற்போதைய பெட்ரோல் பைக்குகளை மாற்றி இ-பைக்குகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரட்டன்இந்தியா நிறுவனத்தின் ஆதரவுப் பெற்ற மின்சார வாகன தயாரிப்பாளர் ஆன ரிவோல்ட் மோட்டார்ஸ் உடன் கைகோர்த்துள்ளது. டெலிவரி தேவைகளுக்கு ஏற்றவாறு ரிவோல்ட் RV300 மின்சார பைக் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

டோமினோஸ் நிறுவனம் முதற்கட்டமாக சில மின்சார வாகனங்களைக் கொண்டு வெற்றிகரமாக சோதனைச் செய்ததை அடுத்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. 

“இந்த முயற்சியில் டோமினோஸ் உடன் கைகோர்ப்பதில் ரிவோல்ட் மோட்டார்ஸ் மகிழ்ச்சியடைகிறது, இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது மட்டுமல்லாமல், நிறுவனத்திற்கு பெரும் சேமிப்பையும் வழங்குகிறது” என்று ரட்டன்இந்தியா நிறுவனத்தின் வணிகத் தலைவர் அஞ்சலி ரட்டன் கூறினார்.

Views: - 165

0

0