டிக்டாக் செயலிக்கு செப்டம்பர் 15’க்குப் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படாது..! டிரம்ப் உறுதி..!

11 September 2020, 12:14 pm
Donald_Trump_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கிற்கு வழங்கப்பட்ட செப்டம்பர் 15 காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டார்.

பாதுகாப்பு காரணங்களால் டிக்டாக் மற்றும் 100’க்கும் மேற்பட்ட சீன மொபைல் செயலிகளை தடை செய்த முதல் நாடு இந்தியா. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். அதையே தங்கள் நாட்டிலும் செய்வதற்கான செயல்முறையைத் தொடங்கினர்.  

இந்நிலையில் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு உத்தரவில், டிரம்ப் சீன செயலியின் உரிமையை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் 15’ஐ நிர்ணயித்திருந்தார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்ற முடியாமல் போனால், டிக்டாக் செயலியை தடை செய்து விடுவதாகக் கூறியிருந்தார்.

ஆரம்ப கட்டங்களில், மைக்ரோசாப்ட் டிக்டாக் செயலியை வாங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. மைக்ரோசாப்ட் மட்டுமல்லாது மேலும் பல நிறுவனங்கள் இந்த போட்டியில் இருந்ததாகாக் கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.

“நான் காலக்கெடுவை நீட்டிக்கவில்லை. செப்டம்பர் 15’க்கு பிறகு டிக்டாக் செயலிக்கு காலக்கெடு நீட்டிப்பு இருக்காது” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

“என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்ப்போம். அது மூடப்படும் அல்லது அவர்கள் அதை விற்றுவிடுவார்கள். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நாட்டில் டிக்டாக் சீன நிறுவனத்திடமிருந்து அமெரிக்க நிறுவனத்திற்கு கைமாறும் அல்லது மூடப்படும்” என்று டிரம்ப் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

Views: - 0

0

0