இந்தியாவில் 5ஜி சோதனைகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி

5 May 2021, 10:46 am
DoT Allows Reliance Jio And Airtel To Conduct 5G Trials In India
Quick Share

இந்தியாவில் 5ஜி சோதனைகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு துறை இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், வோடபோன்-ஐடியா, மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட 13 நிறுவனங்களின் 5ஜி சோதனைக்கு 700 MHz கற்றைகளை வழங்க அரசு அனுமதித்துள்ளது.

DoT Allows Reliance Jio And Airtel To Conduct 5G Trials In India

பாதுகாப்பு முக்கியம்

அதே சமயம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சோதனைகளை மேற்கொள்ளும்போது தொலைதொடர்பு நிறுவனங்கள் பாதுகாப்பையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது. 

தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களையும் 700 MHz கற்றைகளை சோதனைகளுக்கு பயன்படுத்துமாறும், வணிக ரீதியாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டணி

DoT Allows Reliance Jio And Airtel To Conduct 5G Trials In India

இந்த 5ஜி சோதனைகளை மேற்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையத்துடனும் மற்றும் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை எரிக்சன் மற்றும் நோக்கியா உள்ளிட்ட பிற விற்பனையாளர்களுடனும் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களில் சோதனைகளுக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விரைவில் 700 MHz இல் அலைக்கற்றைகள் வழங்கப்படும், சில நிபந்தனைகளுடன் சோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி சோதனைகளுக்கு அவர்கள் கூட்டணி அமைக்கும் அனைத்து விற்பனையாளர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த சோதனைகளுக்காக ரிலையன்ஸ் ஜியோ சாம்சங், நோக்கியா மற்றும் எரிக்சன் ஆகியோருடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சோதனைகளை நடத்துவதற்காக ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நோக்கியா, எரிக்சன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மேவெனிர் ஆகியவற்றுடன் கூட்டுசேர்ந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை

DoT Allows Reliance Jio And Airtel To Conduct 5G Trials In India

தொலைதொடர்பு நிறுவனங்கள் சோதனைகளை மேற்கொள்ள ஹவாய் மற்றும் ZTE போன்ற சீன நிறுவனங்களுடன் கூட்டுச் சேரக்கூடாது என்றும் அதற்கு தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தவிர, ரிலையன்ஸ் ஜியோ Massive MIMO மற்றும் 5G ஸ்மால் செல் கருவிகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. தவிர, சுயசார்பு பாரத நோக்கத்தைக் கருத்தில் கொண்டு ஜியோ தனது 5ஜி நெட்வொர்க்கை சொந்தமாக உருவாக்கவும் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Views: - 306

0

0