Rakshita bike ambulance | டிஆர்டிஓ உருவாக்கிய ரக்ஷிதா பைக் ஆம்புலன்ஸ் | இதிலென்ன சிறப்பா இருக்குனு பாருங்க..

20 January 2021, 1:10 pm
DRDO-developed Rakshita bike ambulance handed over to CRPF | Know key features of this emergency vehicle
Quick Share

DRDO பைக் ஆம்புலன்ஸ்: நெரிசலான பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களில் ட்ராஃபிக்கில் சிக்கியுள்ள நோயாளிகளுக்கு ஒரு உடனடி வசதியாக, டிஆர்டிஓ ஒரு தனித்துவமான மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த பைக் ஆம்புலன்ஸ் விரைவாக செல்லக்கூடியது, குறுகலான சந்துக்களிலும் செல்லக்கூடியது மற்றும் அதிகம் கலவரம் நடக்கும் பகுதிகளிலிருந்தும் நோயாளிகளை எளிதாக வெளியேற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

டெல்லியை தளமாகக் கொண்ட DRDO வின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (INMAS), பைக் அடிப்படையிலான விபத்து போக்குவரத்து அவசர வாகனமான ரக்ஷிதாவை CRPF என்று சொல்லக்கூடிய மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஒப்படைத்தது.

புதுடில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் திங்கள்கிழமை, ஜனவரி 18 அன்று நடைபெற்ற விழாவில், இந்த தனித்துவமான ஆம்புலன்ஸ் CRPF-க்கு ஒப்படைக்கப்பட்டது. 

‘ரக்ஷிதா’ பைக்கின் சிறப்பு அம்சங்கள்:

  • இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் அவசர சுகாதார வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க பைக் ஆம்புலன்ஸ் உதவும். காயமடைந்த நோயாளிகளை கலவர பகுதிகளில் இருந்து வெளியேற்றி உயிர் காக்கும் உதவியை இது வழங்கும்.
  • நெரிசலான வீதிகள் மற்றும் தொலைதூர இடங்களுக்கு ஆம்புலன்ஸ் செல்வது கடினம் மற்றும் அதிக நேரம் எடுக்கும். அது போன்ற சூழ்நிலைகளில் ரக்ஷிதா பைக் ஆம்புலன்ஸின் விரைவான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைந்த அவசர மருத்துவ உதவி அமைப்பு காரணமாக நோயாளிகளின் அவசர மருத்துவ தேவைக்கு ரக்ஷிதா பைக் ஆம்புலன்ஸ் விரைவாக உதவ முடியும்.
  • ரக்ஷிதா பைக் ஆம்புலன்ஸில் தனிப்பயனாக்கப்பட்ட சாய்வான Casualty Evacuation Seat (CES) அதாவது விபத்து வெளியேற்ற இருக்கை பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் நோயாளியை விரைவாக விபத்துப் பகுதியிலிருந்து அழைத்துச் செல்ல முடியும்.

மற்ற முக்கிய அம்சங்களில், தலை அசையாமல் இருப்பதற்கான அமைப்பு, பாதுகாப்பு ஜாக்கெட், பாதுகாப்பிற்கான கை மற்றும் கால் ஸ்ட்ராப்கள், சரிசெய்யக்கூடிய ஃபுட்ரெஸ்ட், வயர்லெஸ் கண்காணிப்பு திறன் கொண்ட உடலியல் அளவுரு அளவிடும் கருவிகள் மற்றும் ஓட்டுநருக்கான ஆட்டோ எச்சரிக்கை அமைப்பு போன்றவை உள்ளன. 

நோயாளியின் முக்கிய அளவுருக்களை டாஷ்போர்டில் பொருத்தப்பட்ட எல்சிடியின் மூலம் கண்காணிக்க முடியும். இது உடனடி மருத்துவ பராமரிப்புக்காக ஏர் ஸ்பிளிண்ட், மெடிக்கல் மற்றும் ஆக்ஸிஜன் கிட் ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.

Views: - 4

0

0