ரகிட ரகிட…! இந்தியாவில் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் விரைவில் | ஆரம்பமானது முன்பதிவு| விலை தெரியுமா?
27 February 2021, 2:51 pmஎலோன் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டார்லிங்க் வலைத்தளத்தின்படி, நிறுவனம் இந்த சேவையை 2022 க்குள் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்த ஆர்வமுள்ள இந்திய பயனர்கள் இப்போதே அதை முன்பதிவு செய்யலாம். முன்பதிவுக்கான தொகை $99 ஆகும். அதாவது இந்தியா மதிப்பில் சுமார் 7,280 ரூபாய் ஆகும். ஸ்டார்லிங் சேவை வழங்கும் சாதனத்தின் விலை $ 99 ஆகும். இது வரிகளைத் தவிர்த்து வரும் தொகை என்பதை நினைவில் கொள்க.
ஸ்டார்லிங்க் பயனர்களுக்கு டி.டி.எச் சேவைக்கு ஒத்த டிஷ் ஆண்டெனா மற்றும் உபகரணங்கள் தேவைப்படும். ஆரம்பத்தில், இந்த சேவை ஒரு குறிப்பிட்ட வரம்பிலானதாக இருக்கும். இப்போதைக்கு முதலில் வரிசையில் வருபவர்களுக்கு முதலில் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமில்லையெனில் முன்பதிவுகளை திரும்பவும் பெறலாம் மற்றும் முழுத் தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும்.
www.starlink.com வலைத்தளத்தின் மூலம் ஆர்டர் செய்யலாம். ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக்கோள்களிலிருந்து இணையத்தை நேரடியாகக் கொண்டுவரும் திட்டமாகும். ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு இல்லாத தொலைதூர பகுதிகளுக்கு இணைய இணைப்பை வழங்க இந்த அமைப்பு சிறந்ததாக இருக்கும்.
0
0