UMANG ஆப் மூலம் உங்கள் EPF பண இருப்பைச் சரிபார்ப்பது எப்படி?

4 September 2020, 10:26 am
8 Easy Steps To Check Your EPF Balance Using Umang App
Quick Share

உமாங் செயலி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeiTy) மற்றும் e-Governance தேசிய பிரிவு (NeGD) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு தனிநபர் பான், ஆதார், டிஜிலாக்கர், சிலிண்டர் முன்பதிவு, மொபைல் பில் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்துதல் மற்றும் EPF கணக்கு மேலாண்மை போன்ற பல்வேறு வாடிக்கையாளர் மைய வசதிகளைப் பெற உதவுகிறது. 

தனித்தனி பயன்பாடுகளை நிறுவாமல் மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து சேவைகளின் தகவலையும் UMANG பயன்பாடு வழியாக அணுகலாம். மொபைல், டேப்லெட்டுகள் மற்றும் டெஸ்க்டாப்புகள் போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் உமாங் செயலியை நிறுவலாம் மற்றும் இயக்கலாம்.

தற்போதைய COVID-19 தொற்றுநோய்களின் போது உங்கள் வீட்டிலிருந்தே EPF தொடர்பான சேவைகளுக்கு UMANG செயலியைப் பயன்படுத்துவது பெரிய வரமாக மாறியுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், வெவ்வேறு நிறுவனங்களில் உங்கள் EPF கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெறலாம். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்த, உங்களிடம் செயலில் உள்ள யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் UAN மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அதாவது EPFO வில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்க வேண்டும். 

  • உங்களிடம் செயலில் உள்ள UAN இல்லையென்றால், நீங்கள் EPFO போர்ட்டலைப் பார்வையிட வேண்டும் மற்றும் ‘Activate UAN’ விருப்பத்தைக் கொடுக்க வேண்டும், பின்னர் நீங்கள் பெயர், DOB, மொபைல் எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். 
  • அனைத்து விவரங்களும், தேவையான இடத்தில் நிரப்பி கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ‘Get Authentication PIN’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 
  • இப்போது சரியான இடத்தில் உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட PIN ஐ உள்ளிட்டு, உங்கள் UAN ஐ செயல்படுத்த ‘Validate OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

UMANG ஆப் மூலம் உங்கள் EPF கணக்கு இருப்பைச் சரிபார்ப்பது எப்படி?

1. உங்கள் மொபைல் / டேப்லெட்டில் UMANG பயன்பாட்டைத் திறந்து ‘EPFO’ டேபை கிளிக் செய்யவும்

2.இப்போது EPFO ​​முகப்புப்பக்கம் தோன்றும், அதில் Employer-Centric Services (முதலாளி-மைய சேவைகள்), Employee-Centric Services (பணியாளர் மைய சேவைகள்), General Services (பொது சேவைகள்) மற்றும் Pensioner Services (ஓய்வூதியதாரர் சேவைகள்) ஆகிய நான்கு விருப்பங்கள் தோன்றும்.

3. Employee-Centric Services எனும் ‘பணியாளர் மைய சேவைகள்’ விருப்பத்தைக் கிளிக் செய்து, Proceed Further என்பதைக் கிளிக் செய்யவும்

4. இப்போது ‘Employee-Centric Services’ மெனுவின் கீழ் ‘View Passbook’ மற்றும் ‘Raise Claim’ என்ற விருப்பங்கள் தோன்றும்.

5. உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க ‘View Passbook’ எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

6. இப்போது உங்கள் UAN எண்ணை உள்ளிட வேண்டிய இடத்தில் ஒரு login பிரிவு தோன்றும் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற ‘Get OTP’ விருப்பத்தைத் தேர்வு செய்யவும். 

7. உங்கள் OTP சரிபார்க்கப்பட்டதும் உங்கள் EPF கணக்கின் முழுமையான விவரங்களை நீங்கள் சரிபார்க்கலாம். 

8. உங்கள் EPF பாஸ்புக்கையும் நேரடியாக உங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.

Views: - 9

0

0