மத்திய பட்ஜெட் 2021: மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் என்னென்ன மாற்றங்கள்?

2 February 2021, 1:28 pm
Everything FM announced during Union Budget 2021 for mobile phones and electronics sector
Quick Share

முதன்முதலில் காகிதம் இல்லாத பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மொபைல் போன்கள் மற்றும் மின்னணு துறைக்கான சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். உள்நாட்டு மின்னணு உற்பத்தி வேகமாக வளர்ந்து வருவதாகவும், உள்ளூர் தொலைபேசிகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், அரசாங்கம் ஒரு சில விலக்குகளை வாபஸ் பெற்று சுங்க வரியை அதிகரிக்க போவதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் தொழில்நுட்ப பட்ஜெட் 2021 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் 2021: தொழில்நுட்ப அறிவிப்புகள்

  • மொபைல் சார்ஜர்கள் மீதான சுங்க வரியை பூஜ்ஜியத்தில் இருந்து 10 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
  • பிரிண்டெட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (PCBA), கேமரா மாடுல் மற்றும் கனெக்டர்ஸ் உள்ளிட்ட தொலைபேசிகளின் சில உபகாரணங்களுக்கு இனி 2.5 சதவீத சுங்க வரி இருக்கும். இந்த சுங்க வரி அதிகரிப்பு காரணமாக, ஏப்ரல் 2021 முதல் மொபைல் போன்களை விலை உயரும்.
  • செல்லுலார் மொபைல் போன்களின் உபகரணங்கள் அல்லது சார்ஜரின் பிளாஸ்டிக் அல்லது அடாப்டரின் பாகங்கள் மீதான சுங்க வரி ‘0’ இலிருந்து 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
  • அதே நேரத்தில் சார்ஜர் அல்லது செல்லுலார் மொபைல் போன்களின் அடாப்டர் உபகரணங்கள் அல்லது அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளி (PCBA) போன்றவற்றின் சுங்க வரியும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • LED விளக்குகள் அல்லது LED விளக்குகள் சார்ந்த பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு தற்போதைய 5 சதவீதத்திற்கு பதிலாக 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும்.
  • மேலும், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களின்  கம்ப்ரெஷர் மீதான சுங்க வரி தற்போதைய 12.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பிப்ரவரி 2 முதல் சார்ஜர்கள் மற்றும் மொபைல் போன்களின் சில பொருட்களுக்கான புதிய  சுங்க வரி பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் பிற பொருட்களுக்கான வரி அதிகரிப்பு ஏப்ரல் 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

Views: - 26

0

0