ரூ.33.30 லட்சம் மதிப்புள்ள போலி சியோமி பொருட்கள் பறிமுதல் | பெங்களூர் & சென்னையில் பரபரப்பு
23 November 2020, 7:38 pmஅக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னையில் நான்கு சப்ளையர்களிடமிருந்தும் மற்றும் பெங்களூரில் மூன்று சப்ளையர்களிடமிருந்தும் ரூ.33.30 லட்சம் மதிப்புள்ள போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக Mi இந்தியா இன்று அறிவித்துள்ளது.
உள்ளூர் காவல்துறையினர் போலிகள் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சியோமி நிறுவனம் புகார் அளித்ததை அடுத்து இரு நகரங்களிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.
பதிவுசெய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அப்பகுதியில் உள்ள மூன்று முக்கிய கடைகளில் இருந்து போலி சாதனங்களை பறிமுதல் செய்தனர். மொபைல் பேக் கேஸ்கள், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்ஸ், சார்ஜர்கள் மற்றும் இயர்போன்கள் ஆகியவற்றைக் கொண்ட 3000 க்கும் மேற்பட்ட போலி தயாரிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சென்னை மற்றும் பெங்களூரில் முறையே ரூ.24.90 லட்சம் மற்றும் ரூ.8.4 லட்சம் மதிப்புள்ள போலி Mi இந்தியா தயாரிப்புகளை விற்பனை செய்ததாக இரு நகரங்களிலிருந்தும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த சப்ளையர்கள் நீண்ட காலமாக இந்த வணிகத்தை நிர்வகித்து வந்துள்ளனர் என்பதும் மற்றும் சந்தையில் பல அங்கீகரிக்கப்படாத தயாரிப்புகளை விற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
0
0