Google Pay மூலம் பண பரிமாற்றம் செய்ய கட்டணம்… பயனர்கள் அதிர்ச்சி… இந்தியர்கள் மகிழ்ச்சி!

25 November 2020, 5:01 pm
Fee on money transfers for US, doesn't apply to India: Google Pay
Quick Share

கடந்த வாரம், கூகிள் அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கூகிள் பே பயன்பாட்டை அமெரிக்காவிலிருந்து தொடங்கி அறிமுகம் செய்யப்போவதாகவும், இணைய உலாவியில் (Web Browser) சேவையைப் பயன்படுத்த முடியாது என்றும் அறிவித்திருந்தது.

கூகிள் பே உடனடி பண பரிமாற்றத்திற்கும் கட்டணம் வசூலிக்கும் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து நெட்டிசன்கள் இது குறித்து விமர்சித்து வந்தனர்.

இதையடுத்து, கூகிள் புதன்கிழமையான இன்று ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவில் பயனர்கள் அதன் கட்டண தளத்தில் பணப் பரிமாற்றத்திற்கு எந்தவித கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் கூகிளின் இந்த கட்டண முறை அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கானது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

கூகிள் பே இந்தியாவில் 67 மில்லியன் அதாவது சுமார் 67 லட்சம் பயனர்களைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2019 நிலவரப்படி, வருடத்திற்கு மொத்தம் 110 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூகிள் பே ஃபார் பிசினஸ் ஜூன் 2020 நிலவரப்படி 3 மில்லியனுக்கும் அதிகமான வணிகர்களை கொண்டுள்ளது. இது UPI மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் பணம் செலுத்துவதற்கு ஆதரிக்கிறது.

கூகிள் பே இந்தியாவில் பேடிஎம், வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபோன்பே மற்றும் அமேசான் பே போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.