கூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு! இப்போ விலை எவ்ளோ தெரியுமா?

3 May 2021, 8:44 am
Flipkart Big Saving Days Sale 2021 Google Pixel 4a India Price Drops To Rs 26,999; Check Offers & Prices
Quick Share

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தற்போது நடைபெற்று வரும் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக பல ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த சலுகைகள் 2021 மே 7 வரை கிடைக்கும். இந்த விற்பனையின் போது பிளிப்கார்ட், கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலை ரூ.5,000 தள்ளுபடியுடன் ரூ.26,999 விலையில் வழங்கும்.

இந்த சலுகையைத் தவிர, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் / கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் EMI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி அல்லது ரூ.1,000 வரை தள்ளுபடி பெறலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வழியாக 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் OLED டிஸ்ப்ளே, FHD + ரெசல்யூஷன், 12.2MP ஒற்றை பின்புற கேமரா, 8MP முன் கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G SoC, 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 1840 சார்ஜருடன் 3140 mAh பேட்டரி , மற்றும் ஆன்ட்ராய்டு 10 OS மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

Views: - 87

0

0

Leave a Reply