மொபைல்ஸ் போனான்ஸா விற்பனை: போகோ போன்களில் அதிரடி தள்ளுபடிகள்

24 February 2021, 1:45 pm
Flipkart Mobiles Bonanza Sale: Discounts on Poco X3, Poco C3, Poco M2, Poco M2 Pro
Quick Share

பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸா விற்பனைக்கு முன்னதாக, போகோ இன்று இடைப்பட்ட மற்றும் நுழைவு-நிலை பிரிவுகளில் அதன் தயாரிப்புகளின் வரம்பில் அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை 11:59 மணிக்கு விற்பனை தொடங்கும் நிலையில், போகோ ரசிகர்கள் மற்றும் பயனர்கள் no cost EMI வசதியுடன் இந்த போனைப் பெற முடியும். இந்த விற்பனை பிப்ரவரி 27 ஆம் தேதி வரை தொடரும் அதே வேளையில் இந்த நாட்களில் வாங்கும்போது போகோ ஸ்மார்ட்போன்களில் உடனடி கேஷ்பேக்குகள், பிரத்தியேகமாக தள்ளுபடிகளையும் பிளிப்கார்ட் வழங்கும்.

பிளிப்கார்ட் மொபைல்கள் போனான்ஸா விற்பனையின் போது, 120 Hz டிஸ்ப்ளே கொண்ட போகோ X3, ரூ.15,499 எனும் ஆரம்ப விலையில் கிடைக்கும். போகோ X3 (6/64) போனின் விலை ரூ.15,499, போகோ X3 (6/128) விலை ரூ.16,499, போகோ X3 (8/128) விலை ரூ.18,499 ஆக இருக்கும்.

போகோ C3 ரூ.6999 முதல் கிடைக்கும். போகோ C3 (3/32) ரூ.6,999 க்கும், போகோ C3 (4/64) ரூ.7,999 க்கும் கிடைக்கும்.

முழு HD+ டிஸ்ப்ளே கொண்ட போகோ M2 மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட போகோ M2 புரோ முறையே ரூ.9999 மற்றும் ரூ.11999 விலையில் கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி உறுப்பினர்கள் கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம்.

போகோ M2 (6/64) ரூ.9,999 விலைக்கும், போகோ M2 (6/128) ரூ.10999 விலைக்கும் கிடைக்கும். போகோ M2 புரோ (4/64) ரூ.11,999 விலைக்கும், போகோ M2 ப்ரோ (6/64) ) ரூ.12,99 விலைக்கும், போகோ M2 புரோ (6/128) ரூ.14,999 விலைக்கும் கிடைக்கும்.

இந்த விற்பனையின் போது போகோ M3 பிளிப்கார்ட்டில் வாங்கும்போது, ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 10% உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Views: - 8

0

0