2030 ஆண்டிற்குள் 25,000 மின்சார வாகனங்கள் | தீவிரம் காட்டும் ஃபிளிப்கார்ட்!

25 February 2021, 9:57 am
Flipkart plans to deploy 25,000 electric vehicles by 2030
Quick Share

அமேசான் இந்தியா கிட்டத்தட்ட 100 மஹிந்திரா ட்ரியோ சோர் முச்சக்கர மின்சார வாகனங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து, ஆன்லைன் வர்த்தக தலமான பிளிப்கார்ட் புதன்கிழமை 2030 க்குள் 25,000 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை தனது விநியோகச் சங்கிலியில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளது.

டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, குவஹாத்தி மற்றும் புனே போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விநியோக பயன்பாட்டிற்கு இரு சக்கர மற்றும் முச்சக்கர வண்டி மின்சார வாகனங்களை ஏற்கனவே பல இடங்களில் சோதனை முயற்சியாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், அமேசான் இந்தியா தனது விநியோக வாகனங்களில் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 10,000 மின்சார வாகனங்கள் இருக்கும் என்று உறுதியாக அறிவித்திருந்தது.

பிளிப்கார்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதன் விநியோகச் சங்கிலியில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், அவற்றின் தடையற்ற செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் அதன் மையங்களில் தேவையான சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைக்கத் தொடங்கியது.

மேலும், இதற்காக ஆன்லைன் வணிக தலமான ஃபிளிப்கார்ட், ஹீரோ எலக்ட்ரிக், மஹிந்திரா எலக்ட்ரிக் மற்றும் பியாஜியோ உள்ளிட்ட முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களுடனும் கூட்டு சேர்ந்துள்ளது.

Views: - 18

0

0