ரெட்மி K30 அல்ட்ரா முதல் பிக்சல் 4A வரை சமீபத்தில் அறிமுகமான சிறந்த தொலைபேசிகளின் பட்டியல்

17 August 2020, 11:11 am
From Redmi K30 Ultra to Pixel 4a, here are the top phones that launched recently
Quick Share

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை பல முக்கிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளன. ஆரம்பத்தில், கூகிள் இறுதியாக அதன் பட்ஜெட் விலையிலான பிக்சல் 4A ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து சாம்சங் தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. மிக சமீபத்தில், சியோமி தனது ரெட்மி K30 அல்ட்ரா மற்றும் Mi 10 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

ஆக, ஆகஸ்டில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்:

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 6.9 இன்ச் டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865+ செயலி உடன் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பு இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமரா பிரிவில், பின்புறத்தில் 108MP + 12MP + 12MP கேமரா அமைப்பும், முன்புறத்தில் 10MP கேமராவும் உள்ளன. இது 4,500 mAh பேட்டரி உடன் இயக்கப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.1,04,999 ஆகும்.

சியோமி Mi 10 அல்ட்ரா

சியோமி Mi 10 அல்ட்ரா 6.67 அங்குல AMOLED FHD + டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 செயலியைக் கொண்டுள்ளது, இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் 48MP + 48MP + 12MP + 12MP கேமரா அமைப்பு மற்றும் முன்புறத்தில் 20MP கேமரா உள்ளது. இது 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது.

ரெட்மி K30 அல்ட்ரா

சியோமி ரெட்மி K30 அல்ட்ரா 6.67 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ 5 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பு இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் 64MP + 13MP + 5MP + 2MP கேமரா அமைப்பு மற்றும் 2MP செல்பி கேமரா உள்ளது. இது 45WmAh பேட்டரியுடன் 33W ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. இது சீனாவிலும் கிடைக்கிறது.

கூகிள் பிக்சல் 4a

கூகிள் பிக்சல் 4a 5.8 அங்குல FHD+ தெளிவுத்திறன் கொண்ட OLED திரையுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G செயலியில் இயங்குகிறது, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 12.2MP கேமராவும், முன்னால் 8MP கேமராவும் உள்ளன. இது 3140 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது அக்டோபரில் இந்தியாவுக்கு வருகிறது.

ரியல்மீ C12

ரியல்மீ C12 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஹீலியோ G35 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமரா பிரிவில், பின்புறத்தில் 13MP + 2MP + 2MP கேமரா அமைப்பும், முன்புறத்தில் 5MP கேமராவும் உள்ளன. இது 6,000 mAh பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவுக்கு வரும்.