ஜிமெயில் எங்கிருந்து வந்துள்ளது என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி? பலருக்கும் தெரியாத ரகசியம்!

17 February 2021, 3:53 pm
From where someone is sending Gmail to you, know the location from the IP address
Quick Share

நீங்கள் இந்த செய்தியை ஆர்வமாக படிக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் மின்னஞ்சல் அல்லது ஜி-மெயிலைப் பயன்படுத்துபவர் தான் என்று நம்புகிறோம். ஒரு பல மின்னஞ்சல்கள் பல ஜி-மெயில்கள் நமக்கு வருகின்றன, ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாது. 

உங்களுக்கும் ஒரு நபர் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறார் என்றால் கடனிப்பாக அவருடைய இருப்பிடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு விருப்பம் இருக்கும். அது போன்ற விருப்பம் இருந்தும் அதற்கான வழிமுறைத் தெரியவில்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான். இந்த செய்தியில், உங்களுக்கு மின்னஞ்சலின் இருப்பிடத்தை நீங்களே கண்டுபிடிக்கக்கூடிய வழிமுறைகளைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

முதலில், மின்னஞ்சல் அனுப்புநரின் இருப்பிடத்தை அறிய உங்களுக்கு 3 வழிகள் உள்ளன என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். இவற்றில் முதலாவதாக IP முகவரியைக் டிராக் செய்வதன் மூலமும், இரண்டாவதாக மின்னஞ்சல் ID யைத் தேடுவதன் மூலமும், மூன்றாவதாக பேஸ்புக்கின் உதவியுடனும் நம்மால் மின்னஞ்சலின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். 

நீங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க விரும்பும் மின்னஞ்சலைத் திறந்து, வலது பக்கத்தில் உள்ள நேரத்திற்கு அடுத்த பொத்தானைக் கிளிக் செய்து, பின்னர் SHOW ORIGINAL என்பதைக் கிளிக் செய்க. இப்போது ஒரு புதிய தாவல் திறக்கும், உங்களுக்கு IP முகவரி அதில் காண்பிக்கப்படும்.

இப்போது IP முகவரியை நகலெடுத்து Wolfram Alpha தளத்திற்குச் சென்று IP முகவரியைத் தேடுங்கள். அங்கு நீங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக pipl மற்றும் Spokeo வலைத்தளத்திற்குச் சென்று அவர்களின் தேடல் பட்டியில் இருந்து மின்னஞ்சல் ஐடியைத் தேடுங்கள். அனுப்புநரின் இருப்பிடத்துடன் பல விவரங்களை நீங்கள் இதில் பெற முடியும்.

இப்போது மூன்றாவது மற்றும் கடைசி வழி பேஸ்புக். யாராவது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அவர்களின் மின்னஞ்சல் ஐடியை நகலெடுத்து பேஸ்புக்கின் தேடல் பட்டியில் சென்று தேடுங்கள். அந்த பயனர் அதே மின்னஞ்சல் ஐடியுடன் பேஸ்புக் ஐடியை உருவாக்கியிருந்தால், அந்த நபரைப் பற்றிய எல்லாவற்றையும் நீங்கள் எளிதாக பேஸ்புக்கில் அறிந்து கொள்ளலாம்.

Views: - 20

1

0