இந்த 6 ஆப்கள் உங்கள் போனில் இருந்தால் உடனே Uninstall பண்ணிடுங்க!

8 September 2020, 7:51 pm
Google bans 6 malware-infected apps from the Play Store, uninstall them right now
Quick Share

தீம்பொருளால் பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆப்களை கூகிள் தடைசெய்த பின்னர், மோசமான ஜோக்கர் தீம்பொருள் மீண்டும் கூகிள் பிளே ஸ்டோரில் சில செயலிகளை பதம் பார்த்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பிரதியோ (Pradeo) இப்போது ஜோக்கர் தீம்பொருளைக் கொண்ட ஆறு புதிய பயன்பாடுகளை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அவை பிளே ஸ்டோரில் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பாதிக்கப்பட்ட பயன்பாடுகளில் கிட்டத்தட்ட 200,000 பதிவிறக்கங்கள் உள்ளன என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது

ஜோக்கர் ஒரு தீங்கிழைக்கும் பாட் என்று பிரதியோ ஒரு வலைப்பதிவு இடுகையில் வாயிலாக தெரிவித்துள்ளது, இது ஃபிளீஸ்வேர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை தீம்பொருளின் முக்கிய பணி, பயனர்களுக்கு தெரியாமல் தேவையற்ற கட்டண பிரீமியம் சேவைகளுக்கு குழுசேர கிளிக்குகளை உருவகப்படுத்துவதும் எஸ்எம்எஸ்-களை இடைமறிப்பதும் தான்.

ஜோக்கர் தீம்பொருள் முடிந்தவரை சிறிய கோடிங்கை பயன்படுத்துகிறது, மேலும் அதைக் கண்டுபிடிப்பதற்கு முயல்கையில் தந்திரமான தடம் ஒன்றை உருவாக்கி அதை முழுமையாக மறைத்துவிடுகிறது.

ஜோக்கர் தீம்பொருளால் பாதிக்கப்பட்டு தீங்கிழைக்கும் ஒன்றாக ஆறு பயன்பாடுகளின் பட்டியல் இங்கே:

  • Safety AppLock, 
  • Convenient Scanner 2, 
  • Push Message- Texting & SMS, 
  • Emoji Wallpaper, 
  • Separate Doc Scanner and 
  • Fingertip GameBox

இந்த பயன்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளன, அவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் அவற்றை உடனே Uninstall செய்துவிடுங்கள் என்று பிரதியோ பரிந்துரைத்துள்ளது.

Views: - 5

0

0