ஜூன் 1 க்குப் பிறகு Google Photos பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா?

29 May 2021, 12:58 pm
Google Photos to end free storage on June 1
Quick Share

ஜூன் 1 க்குப் பிறகு கூகிள் போட்டோஸ் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை கிடையாது. ஏனென்றால், பயனர்கள் தங்களின் உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைக்க வரம்பற்ற ஸ்டோரேஜ் பெற முடியாது என்பதே சரியான தகவல். 

இப்போது வரை உயர் தரமான ஃபைல்களை ஸ்டோர் செய்ய அன்லிமிடெட் ஸ்டோரேஜை கூகிள் போட்டோஸ் தளம் இலவசமாக வழங்குகிறது. ஆனால் ஜூன் 1 க்குப் 15 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே இலவசமாக கிடைக்கும், இதில் ஜிமெயில் மற்றும் கூகிள் டிரைவ் ஸ்டோரேஜ் ஆகியவையும் அடங்கும்.

எனவே 15 ஜிபி க்குமேல் உங்கள் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இருந்தால் அதை நீங்கள் கூகிள் போடோஸில் சேமிக்க முடியாது. அப்படி நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் கூடுதலாக கட்டணம் செலுத்தி கூடுதல் ஸ்டோரேஜ் ஸ்பேஸை வாங்க வேண்டும்.

கூகிள் ஒரு புதிய சேமிப்பக மேலாண்மை கருவி (Storage Management Tool) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கூகிள் போடோஸில் இன்னும் எவ்வளவு ஸ்டோரேஜ் மீதம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்

மங்கலான புகைப்படங்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைக் கண்டுபிடித்து அவற்றை நீக்க கூகிள் புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மங்கலான புகைப்படங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் பெரிய வீடியோக்கள் போன்று நீங்கள் நீக்க விரும்பும் ஃபைல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது.

கூகிள் போட்டோஸ் கணக்கில் உள்ள படங்களை உங்கள் PC யில் டன்லோடு செய்து வேறு இதில் வேண்டுமானாலும் பேக்அப் எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் 15 ஜிபி வரம்பை மீறிவிட்டால், அதற்கு மேல் எதுவும் உங்களால் சேமிக்க முடியாது. அதே போல் உங்கள் கூகிள் கணக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், உங்கள் மின்னஞ்சல்கள், கூகிள் டிரைவ் கோப்புகள் மற்றும் உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்படவும் கூடும்.

உங்கள் சேமிப்பக வரம்பை எட்டியதும், நீங்கள் Google One க்கு குழுசேரலாம் மற்றும் கூடுதல் சேமிப்பிடத்தை வாங்கலாம். கூகிள் ஒன் திட்டங்களை iOS, Android மற்றும் Windows சாதனங்களில் பயன்படுத்தலாம்.

இந்தியாவில், கூகிள் ஒன் திட்டங்கள் மூன்று அடுக்குகளாக வருகின்றன: அடிப்படை திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.130 மற்றும் 100 ஜிபி சேமிப்பை வழங்குகிறது. ரூ.120 விலையில் 200 ஜிபி சேமிப்பு திட்டம் உள்ளது. 2 TB திட்டத்திற்கான விலை மாதத்திற்கு ரூ.650 ஆகும்.

இந்த Google One திட்டங்களை 5 உறுப்பினர்கள் வரை பகிர Google அனுமதிக்கிறது.

Views: - 234

0

0