விற்பனைக்கு முன்னதாக இருமடங்கு விலையில் அமேசானில் விற்பனையாகிறது கூகிள் பிக்சல் 4a! இது உண்மையா? இல்லை ஏமாற்று வேலையா?

Author: Dhivagar
9 October 2020, 3:08 pm
The Google Pixel 4A is listed on Amazon for Rs 54,077 through a Global seller whereas in India the device is a Flipkart-exclusive.
Quick Share

கூகிள் பிக்சல் 4a அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு வெளியீட்டு விலையாக ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் உண்மையான விலை ரூ.31,999 ஆகும்.

இப்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், பிக்சல் 4a ஏற்கனவே அமேசானில் கிடைக்கிறது, ஆனால் அதன் விலை ரூ.54,077 ஆக உள்ளது. இந்த சாதனம் நான்கரை ஸ்டார்கள் உடன் 531 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது மற்றும் அதை விற்கும் சில்லறை விற்பனையாளர் நிறுவனம் ‘Worldwide_Store’ என்ற பெயரைக் கொண்டுள்ளது.

Worldwide_Store எனும் சில்லறை விற்பனையாளர் நிறுவனம் இதுவரை அமேசானில் 93% நேர்மறையான விமர்சனங்களையே கொண்டுள்ளது மற்றும் உலகளவில் சாதனத்தை விற்பனை செய்யும் நிறுவனமாக தோன்றுகிறது. மதிப்புரைகளைப் பார்க்கும்போது, ​​சாதனம் உண்மையானது என்றுதான் தோன்றுகிறது, இது அமெரிக்கா போன்று கூகிள் பிக்சல் 4A போனை ஏற்கனவே விற்பனை செய்யும் நாடுகளிலும் விற்பனையாளராக இருப்பதால் இந்தியாவிற்கும் கொண்டுவரக்கூடும் என்பதால்  விற்பனைப் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஆனால், நீங்கள் இதை வாங்க வேண்டாம் என்று Updatenews360 சார்பாக பரிந்துரைக்கிறோம். ஏனெனில், அமேசானில் அசல் இந்திய விலையை விட விலை இருமடங்காக உள்ளது மற்றும் இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்திற்கு மட்டுமே பிரத்தியேகமானது என்பதால் நீங்கள் அமேசான் விற்பனையாளரிடமிருந்து தொலைபேசியை வாங்க வேண்டாம். நீங்கள் கூகுள்  பிக்சல் 4a போனை வாங்க வேண்டும் என்றால்  ஒன்னும் ஒரு வாரம் மட்டும் காத்திருந்தாலே குறைந்த விலையில் வாங்க முடியும் 

கூகிள் பிக்சல் 4A விவரக்குறிப்புகள்

கூகிள் பிக்சல் 4a 5.81 இன்ச் முழு HD+ OLED டிஸ்ப்ளேவுடன் 2340 x 1080 பிக்சல்கள், 443 ppi பிக்சல் அடர்த்தி, HDR ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G செயலி மற்றும் அட்ரினோ 618 GPU கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

கேமரா முன்பக்கத்தில், ஸ்மார்ட்போன் 12.2 மெகாபிக்சல் பின்புற கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் பிடி ஆட்டோஃபோகஸ், OIS, EIS மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.

தொலைபேசி 3140mAh பேட்டரியுடன் வருகிறது, மேலும் இது 18W வேகமான சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. இணைப்பு முன்னணியில், நீங்கள் 4G VoLTE, Wi-Fi 802.11ac 2x2MIMO (2.4 / 5 GHz), புளூடூத் 5.1 LE, GPS, NFC மற்றும் USB Type-C Gen 1 போர்ட் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

Views: - 63

0

0