கூகிள் பிக்சல் 5, பிக்சல் 4a 5ஜி இன் கிடைக்கும் விவரங்கள் வெளியானது!
26 September 2020, 9:23 pmகூகிள் பிக்சல் 4a 5ஜி மற்றும் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்களை பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. இப்போது, இந்த ஸ்மார்ட்போன்களின் கிடைக்கும் நிலவரம் பற்றிய விவரங்களை கூகிள் வெளியிட்டுள்ளது.
கூகிள் பிக்சல் 4a 5ஜி மற்றும் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாக தயாராக உள்ளது. சமீபத்திய தகவலின்படி, பிரபலமான தகவல் கசிவாளரான ஜான் ப்ரோஸ்ஸர் வரவிருக்கும் கைபேசிகளின் கிடைக்கும் விவரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் படி, பிக்சல் 5 அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதை வாங்க ஆர்வமாக உள்ளவர்களுக்கும் ஒரு சந்தோசமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவெனில் பிக்சல் 4a 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 19 முதல் விற்பனைக்கு வரும். கூகிள் பிக்சல் போன் ரசிகர்கள் நவம்பர் 19 முதல் இந்த போனை வாங்க முடியும்.