மடிக்கக்கூடிய பிக்சல் போனை உருவாக்க விருப்பம் | சாம்சங் உதவியை நாடும் கூகிள்

4 June 2021, 3:38 pm
Google wants to make foldable Pixel, but needs Samsung's help
Quick Share

Display Week 2021 நிகழ்வின்போது மூன்று புதிய மடிக்கக்கூடிய மற்றும் சுருட்டக்கூடிய OLED டிஸ்ப்ளே கான்செப்ட்களை அறிமுகம் செய்து பல முன்னணி நிறுவனங்களின் கவனங்களை ஈர்த்தது சாம்சங். இதையடுத்து கூகிள் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய பிக்சல் போனுக்கான டிஸ்பிளேவுக்காக கொரிய நிறுவனமான சாம்சங் உடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் கடந்த ஆண்டு கேலக்ஸி Z ஃபிளிப்பில் அறிமுகமான மடிக்கக்கூடிய பிக்சல் அல்ட்ரா தின் கிளாஸ் (UTG) தொழில்நுட்பத்தை பிக்சல் ஸ்மார்ட்போனுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரியாவின் ETNews இன் அறிக்கையின்படி, சாம்சங் தனது UTG தொழில்நுட்பத்தை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தவிர மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் விற்க முடிவு செய்துள்ளது.

இதையடுத்து வரவிருக்கும் கூகிள் உருவாக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் மடிக்கக்கூடிய OLED பேனல் மற்றும் UTG தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் டிஸ்ப்ளே 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் UTG பேனல்களை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சுவாரஸ்யம் என்னவென்றால், முதல் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் திரை தோல்வியடைந்த பிறகு, சாம்சங் UTG நுட்பத்தை உருவாக்கியது. இன்றுவரை, UTG திரைகளைப் அதன் சப்ளையர் Dowoo Insys தவிர சாம்சங் மட்டுமே பயன்படுத்துகிறது.

மற்ற உற்பத்தியாளர்கள் UTG திரைகளைப் பயன்படுத்தினாலும், அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.

ஷியோமி மற்றும் ஹவாய் ஆகியவையும் UTG மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகிள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக வதந்திகள் சில காலமாக வெளியாகி வருகின்றன. இதையடுத்து, இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

Views: - 159

0

0