ஆப்பிளுக்கு சுமார் 1500 கோடி செலுத்த தயாராக இருக்கும் கூகிள்! காரணம் என்ன? ஏற்குமா ஆப்பிள்? Google | Apple
Author: Hemalatha Ramkumar30 August 2021, 1:12 pm
உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு பிராண்டாக இருப்பதன் நன்மைகளில் ஒன்று, உங்கள் தயாரிப்புகளில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் கட்டளையிட்டு மாற்றிக்கொள்ள முடியும்.
அப்படி உலகளவில் பிரபலமான ஒரு பிராண்ட் தான் ஆப்பிள். தரமான வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்புகளை வழங்கும் நிறுவனம் என்பதால், ஆப்பிள் நிறுவனத்திற்கு பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தனது ஐபோன், ஐமேக், ஐபேட் போன்ற சாதனங்களைச் சந்தைப்படுத்தி தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துள்ளது ஆப்பிள். இந்தியா உட்பட உலகமெங்கும் பல கோடி நுகர்வோர்கள் ஆப்பிள் சாதனங்களையும், iOS மென்பொருளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி ஆப்பிள் மென்பொருளில் மிக முக்கியமான ஒரு அம்சம் என்றால் தேடல் (Search Engine) தான். பயனர்கள் ஒரு புதிய சாதனத்தைப் பெறும்போது அல்லது ஒரு சிக்கலில் சிக்கும்போது அல்லது ஆன்லைனில் எதையாவது தேடும்போது முதலில் ஒரு browser க்குச் சென்று அதை எப்படி சரி செய்யலாம் என்று தான் தேடுவார்கள். இப்படி தேடுவோருக்குச் சேவையை உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று என்றால் யோசிக்காமல் நம் நினைவுக்கு வரும் பெயர் தான் கூகிள்.
கூகிள் நிறுவனம் தான் உலகின் முன்னணி தேடுபொறி சேவை வழங்கும் நிறுவனமாக இருந்து வருகிறது. அதை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள, கூகுள் ஆப்பிள் சாதனங்களில் default search engine ஆக இருக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு $15 பில்லியன் செலுத்த தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய கணிப்பின் படி, ஆப்பிள் நிறுவனத்திற்கு கூகுள் செலுத்தும் தொகை 2021 ஆம் நிதி ஆண்டில் $15 பில்லியனை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் அதன் போட்டியிடும் தேடுபொறியான Bing போன்றவை default search engine ஆக இடம்பெறாமல் இருக்க கூகுள் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இதில் சில குறிப்பிடத்தக்க அபாயங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று தான் ஒழுங்குமுறை (regulatory risk). இந்த ஒழுங்குமுறை விதிகள் காரணமாக கூகிள் இந்த பந்தயத்தில் வெல்லுமா என்பதால் ஆப்பிள் நிறுவனமே முடிவுச் செய்ய வேண்டும்.
0
0