ரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கும் புதிய GOQii ஃபிட்னஸ் டிராக்கர்!

11 May 2021, 9:12 am
GOQii launches Vital 4 fitness tracker with blood oxygen monitor
Quick Share

GOQii தனது புதிய உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனமான வைட்டல் 4 பிட்னஸ் டிராக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் SPO2, இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு மானிட்டர்கள் என பல அம்சங்கள் உள்ளன. கூடுதலாக, ஃபிட்னஸ் டிராக்கர் IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனையும் மற்றும் ஏழு நாட்கள் பேட்டரி லைஃப் உடனும் வருகிறது.

GOQii Vital 4 அதன் முந்தைய பதிப்பைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஃபிட்னெஸ் டிராக்கரின் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, சாதனம் 120×120 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்ட செவ்வக OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

இதய துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் நிலை, உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், தூக்கம் மற்றும் பலவற்றைக் கண்காணிக்க பயனரை அனுமதிக்கும் பல ஆரோக்கியம் தொடர்பான அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது.

அதோடு, நடைபயிற்சி, ஓட்டம், ஒர்க்அவுட், சைக்கிள் ஓட்டுதல், கைப்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், நடனம், கூடைப்பந்து, கிரிக்கெட், யோகா, ஓய்வு, சிட் அப்ஸ், கால்பந்து, ஏறுதல், ஏரோபிக்ஸ் மற்றும் ஜம்பிங் போன்ற உடற்பயிற்சி முறைகளுக்கும் ஃபிட்னஸ் டிராக்கர் ஆதரவுடன் வருகிறது. 

மேலும், GOQii Vital 4 இல் தொலைபேசி கண்டுபிடிக்கும் அம்சம், மியூசிக் ஃபைண்டர் மற்றும் செய்திகள், அழைப்புகள், அரட்டை பயன்பாடுகளுக்கான அறிவிப்புகள் போன்ற அம்சங்களும் உள்ளன. தேர்வு செய்ய ஏராளமான வாட்ச் ஃபேஸ் அம்சங்களும் உள்ளது.

அன்றாட பயன்பாட்டின்போது 7 நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்குவதாகவும், அனைத்து செயல்பாடுகளும் இயக்கப்பட்டிருக்கும்போது 3-4 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் என்றும் GOQii கூறுகிறது. தொடர்ச்சியான இதய துடிப்பு மற்றும் வெப்பநிலை கண்காணிப்பை அணைப்பதன் மூலம் பேட்டரி ஆயுள் 7-8 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

GOQii Vital 4 பிட்னஸ் டிராக்கர் GOQii ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசானில் கிடைக்கிறது. இது ரூ.4,999 விலையில் கிடைக்கிறது மற்றும் கருப்பு, ஊதா மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வெவ்வேறு ஸ்ட்ராப் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

ஃபிட்னஸ் டிராக்கர் பிரிவில் 5000 விலைப்பிரிவில் ஹானர் வாட்ச் ES, அமஸ்ஃபிட் பிப் U ப்ரோ, ரியல்மீ வாட்ச் S, நாய்ஸ் கலர்ஃபிட் புரோ 3 மற்றும் பலவற்றுக்கு இது போட்டியாக இருக்கும். 

Views: - 201

0

0