இந்தியாவில் இனிமே இந்த இரண்டு ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் கிடைக்காது!

26 January 2021, 6:22 pm
Harley-Davidson Street 750 and Street Rod discontinued in India
Quick Share

ஹார்லி-டேவிட்சன் 2020 செப்டம்பரில் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து, ஹரியானா ஆலையில் உற்பத்தியையும் நிறுத்தியது. இதன் விளைவாக, அமெரிக்க பிராண்டின் மலிவு விலையிலான மோட்டார் சைக்கிள்கள் ஆன ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் ஆகியவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

அக்டோபரில் ஹார்லி-டேவிட்சன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் கூட்டாக இந்தியாவில் இயங்கி வந்தாலும், இப்போது அது CBU பாதை வழியாக கொண்டு வரப்படும் நாட்டிற்கான அதன் உயர்நிலை மோட்டார் சைக்கிள்களில்  மட்டுமே கவனம் செலுத்துகிறது.

தற்போதைய நிலவரப்படி, அயர்ன் 883 என்பது தான் நிறுவனத்தின் நுழைவு நிலை மோட்டார் சைக்கிள் ஆகும், இதன் விலை ரூ.9.38 லட்சம், (எக்ஸ்ஷோரூம்) ஆகும். ஒப்பிடும்போது, ஸ்ட்ரீட் 750 மாடலின் விலை ரூ.4.69 லட்சம் ஆகவும், சற்றே அதிக ஸ்போர்ட்டியர் பதிப்பான ஸ்ட்ரீட் ராட் விலை ரூ.5.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) விலையையும் கொண்டிருந்தது. 

நிறுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் 750 சிசி, V-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன, ஆனால் வெவ்வேறு ஆற்றல் வெளியீடுகளுடன். ஸ்ட்ரீட் 750 பைக்கானது 55 bhp மற்றும் 59 Nm திருப்புவிசையினை வெளியேற்றுகிறது, ஸ்ட்ரீட் ராட் 70 bhp மற்றும் 62 Nm உச்ச திருப்பு விசையை வெளியேற்றுகிறது.

Views: - 0

0

0