ஹானரை விற்கும் ஹவாய் நிறுவனம்… ஏன் இந்த திடீர் முடிவு???

14 November 2020, 2:15 pm
Quick Share

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் – ஹவாய் தனது ஸ்மார்ட்போன் பிராண்டான ஹானரை ஒரு கூட்டமைப்பிற்கு விற்க திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவு 100 பில்லியன் யுவான் (15.2 பில்லியன் டாலர்) தொகையை இதற்காக  பெறும் என்று ஒரு புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பத்திரிக்கையாளர்களின்  புதிய அறிக்கைப்படி, ஹேண்டுசெட் டிஸ்ட்ரிபியூட்டர்  டிஜிட்டல் சீனா மற்றும் ஷென்சென் அரசாங்கத்தின் தலைமையிலான குழு இதனை வாங்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடுகிறது. 

மேலும் அந்த விற்பனை அனைத்தும் பணம் மூலம்  மேற்கொள்ளப்படும் என்றும் ஸ்மார்ட்போன் வணிகத்தின் “கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களும்” விற்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் பிராண்ட், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்கள் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை ஆகியவை அடங்கும். டிஜிட்டல் சீனா குரூப் கோ லிமிடெட் தற்போது ஹானரின் முக்கிய விநியோகஸ்தராக உள்ளது மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற வணிகங்களில் ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. 

ஒப்பந்தம் முடிந்ததும், நிறுவனம் ஹானர் டெர்மினல் கோ லிமிடெட் நிறுவனத்தின் முதல் இரண்டு பங்குதாரர்களாக மாறும். அதில் கிட்டத்தட்ட 15% உரிமையைக் கொண்டுள்ளது. இதற்காக, டிஜிட்டல் சீனா வங்கிக் கடன்களுடன் பெரும்பாலான ஒப்பந்தங்களுக்கு நிதியளிக்கும். ஷென்சென் அரசாங்கத்தின் ஆதரவுடன் குறைந்தபட்சம் மூன்று முதலீட்டு நிறுவனங்கள், டிஜிட்டல் சீனாவில் கையகப்படுத்தலில் மேலும் சேரும். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 10% முதல் 15% வணிகத்தை சொந்தமாக்கும். 

ஹானரின் “நிர்வாக குழு மற்றும் 7,000-க்கும் அதிகமான பணியாளர்கள்” கையகப்படுத்தப்பட்ட பின்னர் தக்கவைக்கப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. நிறுவனம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பப்ளிக்காக  செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹவாய்  தற்போது அமெரிக்காவில் வணிகத்திற்கான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை ஹவாய் பலமுறை மறுத்து வருகிறது. எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில், நிறுவனம் குறித்த நாட்டின் கொள்கை எந்த நேரத்திலும் மாறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. 

எனவே ஹவாய் உயர்நிலை கைபேசிகள் மற்றும் கார்ப்பரேட் சார்ந்த வணிகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஹவாய் நிறுவனத்திலிருந்து விலக்குவது ஹானர் மீண்டும் அமெரிக்காவில் செயல்பட உதவும். இப்போதைக்கு, சம்பந்தப்பட்ட கட்சிகள் எதுவும் வளர்ச்சி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Views: - 16

0

0