தொழில்நுட்ப துறையில் அதிகம் சொத்துக்களைக் கொண்டுள்ள 10 பணக்கார இந்தியர்கள் இவர்கள் தான்!

Author: Dhivagar
4 October 2020, 9:37 pm
Here are the 10 richest Indians in the tech space
Quick Share

IILF வெல்த் ஹுருன் இந்தியா 2020 இன் பணக்காரர்கள் பட்டியல் வெளியானது. தொழில்நுட்ப துறையில் உள்ளவர்களில் யார் யாரெல்லாம் இந்தப் பட்டியலில் முதல் பத்து இடத்தைப் பிடித்து உள்ளனர் என்பதை நாமும் அறிந்துக்கொள்வதற்கான நேரம் இது. புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இன்போசிஸ், HCL, விப்ரோ மற்றும் பலவற்றிலிருந்து அறியப்பட்ட சில நபர்களும் உள்ளனர்.

  • பட்டியலில் முதலிடம் பிடித்தவர் வேறு யாருமல்ல, HCL நிறுவனத்தின் நிறுவனர் சிவ் நாடார். பட்டியலின் படி அவர் ரூ1,41,700 கோடி சொத்துக்களை வைத்திருக்கிறார். 
  • சிவ் நாடரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் விப்ரோவின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜி சுமார் ரூ.1,14,400 கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளார். 
  • மூன்றாவது இடத்தில் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான Zscaler நிறுவனத்தின் நிறுவனர் ஜே சவுத்ரி உள்ளார். பட்டியலின் படி, அவரது மொத்த சொத்து சுமார், ரூ.65,800 கோடிகள் ஆகும். 
  • நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனர் சுனில் மிட்டல் மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோர் முறையே, ரூ.25,500 கோடி மற்றும், ரூ.23,000 கோடி சொத்துக்களுடன் பிடித்துள்ளனர்.
  • முதல் 10 தரவரிசையில் அடுத்த பகுதியில், பைஜுஸ் நிறுவனத்தின் ரவீந்திரன், ரூ.20,400 கோடி சொத்துக்களுடன் 6 வது இடத்தில் உள்ளார், 
  • இன்போசிஸின் இணை நிறுவனர்களில் ஒருவரான எஸ் கோபால்கிருஷ்ணன் 7 வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ18,100 கோடி ஆகும். 
  • இவர்களைத் தொடர்ந்து இன்போசிஸின் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி, ரூ.16,400 கோடி சொத்துக்களுடனும், மீடியா.நெட் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர் திவ்யாங்க் துராகியா ரூ.14,000 கோடி சொத்துக்களுடனும் 8 மற்றும் 9 வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
  • 10 வது இடத்தில் உடான் நிறுவனத்தின் இணை நிறுவனரான அமோத் மால்வியா 13,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்த இடத்தை அதே  சொத்து மதிப்புடைய சுஜீத் குமார் மற்றும் வைபவ் குப்தா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.
  • இன்போசிஸின் மற்றொரு இணை நிறுவனர் நந்தன் நிலேகனி அவர்களும் ரூ.12,000 கோடி சொத்துக்களுடன் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

Views: - 56

0

0