ரூ.25,000 விலையின் கீழ் வாங்குவதற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கே

13 September 2020, 8:09 am
Here are the top value-for-money smartphones under ₹25,000
Quick Share

பட்ஜெட் மற்றும் நுழைவு-நிலை ஸ்மார்ட்போன் பிரிவுகள் சமீப காலமாக ஏராளமான ஸ்மார்ட்போன்களை காண்கின்றன. அதேபோல், பிரீமியம் பிரிவில் அதாவது ரூ.30,000 க்கு மேலும் நிறைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையிலான விலைப்பிரிவில் நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் எதை தேர்வு செய்யலாம்? அதை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

சாம்சங் கேலக்ஸி M51

இடைப்பட்ட பிரிவில் சமீபத்திய சாம்சங் கேலக்ஸி M51 சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். தொலைபேசியின் முக்கியமான ஈர்க்கும் விஷயம் அதன் 7,000 mAh பேட்டரி தான். இப்படிப்பட்ட அம்சம் எந்த போனிலும் இல்லை. ஒரு பெரிய பேட்டரியைத் தவிர, சாம்சங் கேலக்ஸி M51 குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G செயலியில் இயங்குகிறது. இது முழு HD+ தெளிவுத்திறனுடன் 6.7 அங்குல sAmoled இன்பினிட்டி-O டிஸ்ப்ளே கொண்டுள்ளது. தொலைபேசியின் மற்றொரு சிறப்பம்சமாக 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் உடன் குவாட்-கேமரா அமைப்பு இடம்பெறும். தொலைபேசி ரூ.24,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ரியல்மீ X3

இந்த பிரிவில் பணத்திற்கான மதிப்புடன் கூடிய மற்றொரு ஸ்மார்ட்போன் ரியல்மீ X3 ஆகும். ரியல்மீ X3 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் 6.6 இன்ச் FHD+ திரை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 855+ ஆக்டா கோர் செயலியைக் கொண்டுள்ளது, இது குவால்காமின் கடந்த ஆண்டின் முதன்மை செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். தொலைபேசியின் மற்றொரு சிறப்பம்சமாக 64 மெகாபிக்சல் உடன் குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. ரியல்மீ X3 ரூ.24,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ரெட்மி K20 ப்ரோ

சியோமியின் ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனும் இந்த பிரிவிற்கானது. சிறப்பான கேமரா மற்றும் செயல்திறனை வழங்கும் விரிவான தொகுப்பைத் தேடுவோருக்கு இந்த தொலைபேசி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். விவரக்குறிப்புகள் வாரியாக, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 செயலி, 8 ஜிபி ரேம் வரை, 256 ஜிபி வரை ஸ்டோரேஜ், 6.39 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே, 48 எம்பி + 13 எம்பி + 8 எம்பி டிரிபிள் ரியர் கேமரா, 20 எம்பி பாப்-அப் செல்பி கேமரா மற்றும் 4,000 mAh பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. தொலைபேசி தற்போது ரூ.22,999 என்ற ஆரம்ப விலையில் ஆன்லைனில் கிடைக்கிறது.

மற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ரூ.25,000 விலையின் கீழ் கிடைக்கும் மற்ற சில சிறந்த ஸ்மார்ட்போன்களில் விவோ V19, போக்கோ X2, ஹானர் 20 மற்றும் சாம்சங் கேலக்ஸி M31s ஆகியவையும் உள்ளன.

Views: - 0

0

0