பிளிப்கார்ட் “Big Billion Days”: சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளின் பட்டியல்

Author: Dhivagar
15 October 2020, 2:25 pm
Flipkart Big Billion Days: Top offers, discounts on Galaxy S20+, iPhone 11 Pro and more
Quick Share

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை நாளை (அக்டோபர் 15) துவங்க உள்ளது. பண்டிகைக் கால விற்பனை பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு மட்டும் இன்றே விற்பனை ஆரம்பமாகிறது, இது அக்டோபர் 21 வரை தொடரும். பிளிப்கார்ட் ஏற்கனவே ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கான சலுகைகளையும் தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.

ஆப்பிள், சாம்சங் மற்றும் எல்ஜி ஆகியவற்றின் சில பிரபலமான ஸ்மார்ட்போன்கள் இதுவரை மிகப்பெரிய தள்ளுபடியைப் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் ஐபோன் SE (2020), ஐபோன் XR, சாம்சங் கேலக்ஸி S20 +, எல்ஜி G8x மற்றும் பல உள்ளன. இந்த தொலைபேசிகள் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனைக்கான சிறப்பான ஒப்பந்தங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆப்பிள்

ஐபோன் SE (2020) 39% தள்ளுபடியுடன் கிடைக்கும், இதன் விலை, ரூ.37,900 யிலிருந்து ரூ.25,999 ஆகக் குறைக்கப்படுகிறது. 

சில பழைய மாடல்களுடன் ஆப்பிள் ஐபோன் SE யின் விலையைக் குறைத்த சிறிது நேரத்திலேயே இந்த தள்ளுபடி கிடைக்கிறது. 

ஐபோன் XR 64 ஜிபி வேரியண்ட் ரூ.37,999 தள்ளுபடி விலையில் கிடைக்கும். பிளிப்கார்ட் ஐபோன் 11 ப்ரோ 64 ஜிபி மாடல் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. இந்த ஐபோனை விற்பனையின் போது, ரூ.​​79,999 விலையில் வாங்கலாம்.

சாம்சங்

சாம்சங் மிகப்பெரிய தள்ளுபடியுடன் இரண்டு முதன்மை தொலைபேசிகளைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10+ பிக் பில்லியன் நாட்களில், ரூ.54,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும். 

ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டின் ஸ்மார்ட் அப்க்ரேடு ஆஃபர் மூலம், ரூ.38,998 என்ற மலிவான விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி S20+ ரூ.33,000 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வரும். இதனால் அதன் விலை ரூ.49,999 ஆகக் குறைக்கப்படும்.

எல்ஜி, மோட்டோரோலா

எல்ஜியின் இரட்டை திரை ஸ்மார்ட்போன் G8x பிக் பில்லியன் நாட்களுக்கு பிளிப்கார்ட்டில் 71% தள்ளுபடி பெறுகிறது. எல்ஜி G8x அதன் சில்லறை விலையான ரூ.70,000 யிலிருந்து தள்ளுபடிக்குப் பிறகு ரூ.19,990 க்கு கிடைக்கிறது.

மோட்டோரோலாவின் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியும் பிளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் கிடைக்கும். ரூ.1,24,999 விலைக்கொண்ட மோட்டோ ரேஸ்ர் பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​ரூ.84,999 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Views: - 54

0

0