JioFi டிவைஸ் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ

3 March 2021, 3:59 pm
Here's How To Find JioFi Device Number
Quick Share

408 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ, அதன் ஜியோஃபை சாதனங்களுக்கு ஒரு போர்ட்டபிள் நம்பரைக் கொண்டுள்ளது. இந்த சிறிய சாதனங்கள் தனிப்பட்ட Wi-Fi ஹாட்ஸ்பாட்கள் வழியாக 10 சாதனங்களுக்கு இணைய சேவையை வழங்குகின்றன. 

எல்லா சாதனங்களுமே ஒரு தனித்துவமான எண்ணுடன் வருகின்றன, இது 4ஜி சிம் உடன் அதன் பயனர்களுக்கு அதிவேக தரவை வழங்குகிறது. உங்கள் Jio-Fi எண்ணை நீங்கள் இழந்திருந்தால், சாதனத்தை ரீசார்ஜ் செய்ய முடியாது. இருப்பினும், அதை கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும் இரண்டு வழிகளை உள்ளது. அது எப்படினு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

JioFi நம்பரைக் கண்டுபிடிப்பது எப்படி?

முறை 1
மெசேஜ் வழியாக JioFi எண்ணைக் கண்டறிதல்

படி 1: உங்கள் ஸ்மார்ட்போனில் மெசேஜ் பயன்பாட்டைத் திறந்து உங்கள் ஜியோ எண்ணை டைப் செய்து 199 என்ற எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

படி 2: நீங்கள் ஒரு ஜியோ பயனர் இல்லை என்றால், நீங்கள் JioFi சாதனத்தின் IMEI எண்ணை உள்ளிட்டு 7021799999 க்கு செய்தி அனுப்ப வேண்டும்.

முறை 2
My Jio ஆப் வழியாக JioFi எண்ணைக் கண்டறியலாம்

படி 1: உங்கள் சாதனத்தில் ஜியோ பயன்பாட்டை பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

படி 2: இப்போது, ​​நீங்கள் உங்கள் ஐடியில் உள்நுழைந்து, உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும், அவ்வளவுதான். இப்போது, ​​உங்கள் JioFi எண்ணை மேலே காணலாம்.

JioFi சாதனங்கள் மொபைல் பயனர்களை இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. இந்த சாதனங்கள் DX மினி ஸ்டோர்ஸ், jio.com மற்றும் நிறுவனத்தின் கடைகளில் கிடைக்கின்றன. ஜியோஃபை சாதனத்தின் விலை ரூ. 1,999 ஆகும்.

Views: - 1

0

0