நீங்க ஜியோ பயனாளரா? 1 ஜிபி டேட்டா ரூ.11 க்கு பெறுவது எப்படி தெரியுமா உங்களுக்கு?

22 January 2021, 5:56 pm
Here's How To Get 1GB Data At Rs. 11
Quick Share

ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் பல ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை மற்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு  வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா வழங்கும் திட்டங்களை விட ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள் 33 சதவீதம் மலிவானவை. கூடுதலாக,ஜியோ இணைய சேவையுடன் அனைத்து பேக்குகளுடனும் டஜன் கணக்கான நன்மைகளை பாக்கெட் இணக்கமான விலையில் வழங்கி வருகிறார்.

அத்துடன் ஜியோ வழங்கும் பிரபலமான திட்டங்கள், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோபோன், ISD, சர்வதேச ரோமிங், இன்-ஃப்ளைட்ஸ் ரோமிங், டாப்-அப்கள் மற்றும் பல சேவைகளை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனம் அனைத்து திட்டங்களுடனும் டேட்டா சேவையையும் வழங்குகிறது மற்றும் 

இருப்பினும், டேட்டா நன்மைகள் ரூ.11 முதல் ஆரம்பமாகிறது, இது தற்போது இருக்கும் திட்டம் நீடிக்கும் வரை 1 ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டம் ஜியோ பயன்பாட்டில் டெலிகாம் பிரிவில் 4ஜி டேட்டா வவுச்சர்கள் என்ற பிரிவில் கிடைக்கிறது. மேலும் இது ரூ. 21, ரூ. 51, மற்றும் ரூ.101 விலைகளிலும் டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி டேட்டா வவுச்சர் விவரங்கள்

ரூ.11 விலையிலான முதல் டேட்டா வவுச்சர் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதே நேரத்தில் ரூ.21 வவுச்சர் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ரூ.51 திட்டம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மற்றும் ரூ.101 திட்டம் 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இந்த திட்டங்களை மற்ற நிறுவன திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏர்டெல் மற்றும் Vi டேட்டாத் திட்டங்களை விட ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி டேட்டா வவுச்சர்கள் மிகவும் மலிவானதாக தெரிகிறது.