கொரோனா பரவல் காரணமாக உற்பத்தி மேலும் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: ஹீரோ மோட்டோகார்ப்

10 May 2021, 8:32 pm
Coronavirus Pandemic: Hero extends production halt by a week
Quick Share

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா முழுவதும் அதன் உற்பத்தி ஆலைகளை மேலும் ஒரு வார காலத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளது. எனவே, நீம்ரானாவில் உள்ள அதன் குளோபல் பார்ட்ஸ் சென்டர் (GPC) மற்றும் அதன் R&D மையம், புதுமை மற்றும் தொழில்நுட்ப மையம் (CIT) ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளையும் 2021 மே 16 வரை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

COVID-19 வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்கும் நோக்கத்துடன், ஹீரோ ஆரம்பத்தில் அதன் உற்பத்தி ஆலைகளை ஏப்ரல் 22 முதல் 20201 மே 1 வரை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. முதல் முறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தொற்று மேலும் தீவிரமடைவதால் இரண்டாவது முறையாகவும் உற்பத்தி மற்றும் மற்ற நடவடிக்கைகளை 9 மே 2021 வரை நிறுத்தி வைப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. 

நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ​​அவர்கள் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். ஹீரோ நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிலைமை மேம்பட்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் போது மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் ஏப்ரல் 2021 இல் 3,72,285 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது. வைரஸின் இரண்டாவது அலை காரணமாக அதன் சராசரி மாத விற்பனையை மிகவும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 166

0

0