ரூ.6,999 விலை முதல் புதிய அளவிலான ஹைசென்ஸ் குளிர்சாதன பெட்டிகள் அறிமுகம் | முழு விவரங்களை அறிக

28 September 2020, 8:11 pm
HiSense launches a new range of refrigerators, price starts at Rs 6,999
Quick Share

வீட்டு உபகரணங்களுக்கான ஒரு பிராண்டான ஹைசென்ஸ் தனது புதிய அளவிலான குளிர்சாதன பெட்டிகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. புதிய வரம்பில் நான்கு பிரிவுகள் உள்ளன – பிரஞ்சு டோர், சைடு-பை-சைடு, டாப் ஃப்ரீசர் மற்றும் சிங்கிள் டோர். 

HiSense launches a new range of refrigerators, price starts at Rs 6,999

இதில் 44L முதல் 690L வரை பல்வேறு திறன்களுடன் பல குளிர் சாதன பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்ட் குளிர்சாதன பெட்டிகளில் 1 ஆண்டு உத்தரவாதத்தையும், இன்வெர்ட்டர் கம்ப்ரெஸ்ஸருக்கு 10 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்கும். இவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவற்றில் செப்டம்பர் 29, 2020 முதல் கிடைக்கும்.

HiSense launches a new range of refrigerators, price starts at Rs 6,999

விலைகள்:

  • 690 லிட்டர் சைட்-பை-சைட் டோர் மாடல் ரூ.64,999 விலையும்,  
  • 560 லிட்டர் மாடல் ரூ.45,999 விலையும் கொண்டிருக்கும். 
  • 507 லிட்டர் பிரஞ்சு கதவு மாடலின் விலை ரூ.54,999 ஆகும். 
  • 411 லிட்டர் டாப்-ஃப்ரீசர் மாடல் ரூ.31,999 விலை கொண்டிருக்கும், 
  • 185 லிட்டர் மாடல் ரூ.11,499 விலை கொண்டிருக்கும், 
  • 93 லிட்டர் மாடலுக்கு ரூ.8,499 விலையும், 
  • 44 லிட்டர் சிங்கிள் டோர் மாடல் ரூ.6,999 விலையும் கொண்டிருக்கும்.

Views: - 85

1

1