ஏப்ரல் 8… ரெடியா இருங்க! நோக்கியா ரசிகர்களுக்கு ரொம்ப முக்கியமான நாள்

2 April 2021, 2:33 pm
HMD Global to host a launch event on 8 April
Quick Share

எச்எம்டி குளோபல் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஒரு வெளியீட்டு நிகழ்வினை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வில் அறிமுகமாகும் சாதனங்கள் குறித்து நிறுவனம் தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. 

NokiaPowerUser மூலம் வெளியான அறிக்கையின்படி, எச்எம்டி குளோபல் நோக்கியா G10, நோக்கியா G20, நோக்கியா X10 மற்றும் நோக்கியா X20 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. நோக்கியா G10 மற்றும் G20 ஆகியவை 5,000mAh பேட்டரி உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா X10 மற்றும் நோக்கியா X20 ஆகியவை ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் வரக்கூடும்.

நோக்கியா G10, நோக்கியா G20: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

நோக்கியா G10 மற்றும் நோக்கியா G20 ஆகியவை ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ P22 சிப்செட் உடன் வரும் என்று ஊகிக்கப்படுகிறது. 6.4 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 48 MP பிரதான கேமரா உடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்க வாய்ப்புள்ளது மற்றும் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் விருப்பங்களை கொண்டிருக்கக்கூடும். இந்த ஸ்மார்ட்போன்கள் 64 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயங்கக்கூடும்.

நோக்கியா G10 மற்றும் நோக்கியா G20 ஆகியவை 8 MP முன் கேமராவைக் கொண்டிருக்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5,000 mAh பேட்டரி பொருத்தப்படும், இது 10W  ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும்.

எதிர்பார்க்கப்படும் விலை 

நோக்கியா X20 இன் விலை சுமார் €349 (தோராயமாக ரூ.30,300) ஆகவும், நோக்கியா X10 மாடலின் விலை €300 (தோராயமாக ரூ.26,000) விலையில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நோக்கியா G10 மற்றும் நோக்கியா G20 விலை குறித்த ஊகங்கள் இதுவரை எதுவும் இல்லை.

Views: - 0

0

0

Leave a Reply