ரூ.1.44 லட்சம் மதிப்பில் ஹோண்டா CB200X ADV இந்தியாவில் அறிமுகம் | அம்சங்கள் & முழு விவரங்கள் இங்கே
Author: Hemalatha Ramkumar19 August 2021, 3:12 pm
ஹோண்டா நிறுவனம் வியாழக்கிழமையான இன்று புதிய சாகச பைக் ஆன CB200X ADV பைக்கை இந்திய சந்தையில் ரூ.1.44 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
புதிய மோட்டார் சைக்கிள் ஹார்னெட் 2.0 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதிலிருந்த இன்ஜின் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் இதிலும் இடம்பெறுகின்றன.
புதிய ADV பைக்கிற்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி என எதுவுமே இல்லை. இது மிகவும் தனித்துவமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இது ராயல் என்ஃபீல்டு இமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ரேஞ்ச் ADV பைக்குகளின் வரிசையில் உள்ளது.
ஹோண்டா ADV பைக்கின் இதயமாக 184 சிசி, ஒற்றை சிலிண்டர், காற்று குளிரூட்டல் அம்சத்துடனான இன்ஜின் உள்ளது. இந்த பவர்டிரெயின் 17 HP அதிகபட்ச சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது, 16 Nm திருப்புவிசையை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை உடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய ADV பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் முழு டிஜிட்டல் லிக்குயிட் கிரிஸ்டல் மீட்டர் கன்சோல் ஆகும், இது சவாரி நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் நல்ல தெரிவுநிலையை வழங்குகிறது. இது கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சர்வீஸ் டியூ இண்டிகேட்டர் மற்றும் பேட்டரி வோல்ட்மீட்டர் போன்ற தகவல்களை 5-லெவல் அட்ஜஸ்டபிள் பிரைட்னஸ் உடன் வழங்குகிறது.
புதிய ADV பைக்கானது பியர்ல் நைட்ஸ்டார் பிளாக், மேட் செலீன் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய மூன்று அற்புதமான வண்ண விருப்பங்களின் தேர்வில் வழங்கப்படுகிறது.
0
0