புள்ளிங்கோ ஸ்கூட்டரின் விலை திடீர் உயர்வு! அதிர்ச்சி கொடுத்த ஹோண்டா!

13 July 2021, 1:08 pm
Honda Dio receives price hike; slightly more expensive than TVS Jupiter
Quick Share

ஊரெங்கும் உள்ள பெரும்பாலான புள்ளிங்கோக்களுக்கு பிடித்த ஸ்கூட்டர் என்றால் அது ஹோண்டா டியோ தான். இந்த ஸ்கூட்டரில் கூடாத சேட்டையைச் செய்து கொண்டு ஜாலியாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள் புள்ளிங்கோ கும்பல். இந்த இவர்களாலேயே தமிழகத்தில் இந்த ஹோண்டா ஸ்கூட்டர் செம ஃபேமஸ். டியோ புள்ளிங்கோ என்ற சொல் இப்போதும் மிகவும் பிரபலம். சமீப காலமாக இந்த ஸ்கூட்டரின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. 

ஹோண்டா தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான விலைகளை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் 109 சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விலை இப்போது உயர்ந்துள்ளது.

இந்த ஸ்கூட்டர் மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது, இவை அனைத்துமே ரூ.1,237 விலை உயர்வு பெற்றுள்ளன. எனவே இப்போது, அடிப்படை பதிப்பின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64,510 ஆக உயர்ந்துள்ளது. இந்த அடிப்படை மாடல் டிவிஎஸ் ஜூபிட்டரை விட 887 ரூபாய் கூடுதல் விலையிலானதாக உள்ளது.

இதையடுத்து DLX வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67,908 உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டாப்-ஆஃப்-லைன் மாடலான ஹோண்டா டியோ ரெப்சோல் பதிப்பின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.70,408 ஆக உயர்த்தபட்டுள்ளது.

என்னதான் நிறுவனம் விலையை உயர்த்தி இருந்தாலும், ஹோண்டா டியோ முன்பைப் போலவே எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இதில் LED ஹெட்லேம்ப் மற்றும் LED DRL உடன் ஸ்டைலானா பாடிவொர்க்குடன் வருகிறது. இந்த டியோ 109 சிசி இன்ஜின் உடன் 7.65 bhp ஆற்றல் மற்றும் 9 Nm திருப்பு விசையை வெளியேற்றும் திறன் கொண்டது.

உற்பத்தியில் அதிகரித்த உள்ளீட்டு செலவுகளை ஈடுசெய்யும் முயற்சியாக விலைகள் உயர்த்தப்பட்டு வருவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 198

0

0