Honda Grazia | ஹோண்டா கிராசியா 125 BS6: ரூ.3,500 கேஷ்பேக் உடன் வாங்க சரியான நேரம் இதுதான்!

12 May 2021, 7:36 am
Honda Grazia 125 BS6 available with cashback
Quick Share

ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது 125 சிசி கிராசியா 125 BS6 ஸ்கூட்டருக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. ஆனால், இந்த சலுகை SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுந்தான் கிடைக்கும். ஹோண்டா கிராசியா BS6 ஸ்கூட்டர் வாங்குபவர்கள் ஐந்து சதவீதம் (ரூ.3,500 வரை) கேஷ்பேக் பெறலாம். EMI பரிவர்த்தனைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த சலுகை மே 1 முதல் ஜூன் 30 வரை கிடைக்கும். இந்த சலுகையைப் பெற குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ.40,000 ஆக இருக்க வேண்டும்.

ஸ்டாண்டர்ட் ஹோண்டா கிரேசியா 125 பிஎஸ் 6 டிரம் மற்றும் டிஸ்க் என இரு வகைகளில் கிடைக்கிறது. இதில் அடிப்படை (டிரம்) பதிப்பு ரூ.75,859 விலையிலும், டிஸ்க் மாறுபாடு ரூ.83,185 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையிலும் கிடைக்கிறது. பிரேக்கிங் சிஸ்டம் தவிர, இரு வகைகளிலும் உள்ள அம்ச பட்டியல் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஜப்பானிய இரு சக்கர வாகன நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த 125 சிசி ஸ்கூட்டரில் LED ஹெட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் சுவிட்ச், மல்டி-ஃபங்க்ஷன் கீஹோல், முன் கையுறை பெட்டி, வெளிப்புற எரிபொருள் மூடி, செயலற்று இருந்தால் நிறுத்தும் அமைப்பு மற்றும் சைலன்ட் ஸ்டார்ட் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சைட்-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் செயல்பாடு ஆகியவையும் அடங்கும்.

கிரேசியா 125 பிஎஸ் 6 தவிர, SBI கிரெடிட் கார்டுடன் கிடைக்கும் கேஷ்பேக் சலுகை ஆக்டிவா 6ஜி மற்றும் டியோ பிஎஸ்6 ஆகியவற்றிற்கும் செல்லுபடியாகும்.

Views: - 171

0

0