108 MP கேமராவுடன் HONOR 50 தொடர் அறிமுகம் | விலை & விவரங்கள் எல்லாம் இங்க தெரிஞ்சிக்கோங்க

17 June 2021, 4:22 pm
HONOR 50 series goes official
Quick Share

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹானர் 50 தொடர் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசை CNY 2,399 (தோராயமாக ரூ.27,500) விலையில் கிடைக்கிறது மற்றும் இந்த தொடரில் ஹானர் 50 SE, 50 மற்றும் 50 ப்ரோ மாடல்களையும் உள்ளடக்கியது.

முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்களில் முழு HD+ திரை, பின்புறத்தில் நான்கு கேமராக்கள், 100W வரை வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 வசதிகள் உள்ளன.

HONOR 50 SE மற்றும் 50 ஆகியவை பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டுள்ளன, புரோ மாடலில் மாத்திரை வடிவ கட்-அவுட் உள்ளது.

50 SE 6.78 அங்குல முழு எச்டி + எல்சிடி திரை மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடரை வழங்குகிறது.

HONOR 50 series goes official

50 மற்றும் 50 ப்ரோ வகைகள் முறையே 6.57 இன்ச் மற்றும் 6.72 இன்ச் ஃபுல்-HD+ வளைந்த OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, 120 Hz refresh rate கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக திரையில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும்.

50 SE ஸ்மார்ட்போன் 100 MP பிரைமரி சென்சார், 8 MP அல்ட்ரா வைட் லென்ஸ், 2 MP மேக்ரோ கேமரா மற்றும் 16 MP முன் எதிர்கொள்ளும் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

50 மற்றும் 50 ப்ரோ மாடல்கள் 108 MP மெயின் சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் ஸ்னாப்பர், 2 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 MP ஆழம் கொண்ட கேமராவை வழங்குகிறது.

முன்பக்கத்தில், ஹானர் 50 ஸ்மார்ட்போன் ஒரு 32MP கேமரா, புரோ வேரியண்ட்டில் 32MP + 12MP இரட்டை லென்ஸ் அமைப்பு உள்ளது.

ஹானர் 50 SE மீடியா டெக் டைமன்சிட்டி 900 செயலியில் இருந்து ஆற்றலை பெறுகிறது, அதே நேரத்தில் 50 மற்றும் 50 ப்ரோ மாடல்கள் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.

SE மற்றும் புரோ மாடல்களில் 4,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, வெண்ணிலா 50 மாடலில் 4,300 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மூன்று மாடல்களுமே 12 ஜிபி வரை RAM, 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் மற்றும் 100W வரை வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவைக் கொண்டிருக்கும்.

HONOR 50 SE 8GB / 128GB மாடலுக்கு CNY 2,399 (தோராயமாக ரூ. 27,500) விலையும், அதே நேரத்தில் ஹானர் 50 மற்றும் ப்ரோ மாடல்களுக்கு முறையே CNY 2,699 (தோராயமாக ரூ.31,000) மற்றும் CNY 3,699 (சுமார் ரூ.42,400) விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

Views: - 158

0

0