ஹானர் பேட் V7 ப்ரோ அதிகாரப்பூர்வ அறிமுகம் | ஆனால் இந்தியாவில் வெளியாகுமா? HONOR Pad V7 Pro

Author: Hemalatha Ramkumar
16 August 2021, 12:55 pm
HONOR Pad V7 Pro goes official in China
Quick Share

நடுத்தர அளவிலான டேப்லெட்டுகளின் பிரிவில், ஹானர் பேட் V7 ப்ரோ டேப்லெட்டை ஹானர் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இது Wi-Fi- ஒன்லி மற்றும் 5G வகைகளில் வழங்கப்படுகிறது. 

இதன் விலை CNY 2,599 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.30,000 முதல் ஆரம்பமாகிறது.

இது மீடியாடெக் கொம்பானியோ 1300T (MediaTek Kompanio 1300T) செயலி கொண்ட முதல் சாதனம் மற்றும் 11 இன்ச் டிஸ்ப்ளே, DTS:X அல்ட்ரா தொழில்நுட்பத்துடன் குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் 7,250 mAh பேட்டரியுடன் வருகிறது.

ஹானோர் பேட் V7 ப்ரோ வழக்கமான செவ்வக திரை விகிதாசார பெசல்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது இரட்டை கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும்.

இந்த சாதனம் 120 Hz refresh rate உடன் 11 அங்குல QHD+ (2560×1600 பிக்சல்கள்) LCD திரையைக் கொண்டுள்ளது.

மேஜிக் பென்சில் 2 ஸ்டைலஸ் 4,096 பிரஷர் பாயிண்ட்ஸ் மற்றும் மேக்னெட்டிக் கீபோர்டு உடன் உள்ளமைக்கப்பட்ட டிராக்பேட் மற்றும் ஸ்டைலஸ் சார்ஜிங் ஹோல்டருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹானோர் பேட் V7 ப்ரோ இரட்டை பின்புற கேமரா தொகுதியை வழங்குகிறது, இதில் 13 MP முதன்மை சென்சார் மற்றும் 2 MP டெப்த் லென்ஸ் ஆகியவை உள்ளது. முன்பக்கத்தில், கேமரா 1080p ரெசல்யூஷன் உள்ளது.

ஹானோர் பேட் V7 ப்ரோ மீடியாடெக் கொம்பானியோ 1300T சிப்செட் உடன் 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MagicUI 5.0 இல் இயங்குகிறது மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,250mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, சாதனம் வைஃபை, ப்ளூடூத், 5 ஜி மற்றும் டைப்-C போர்ட்டிற்கான ஆதரவு ஆகியவற்றை வழங்கும்.

ஹானர் பேட் V7 ப்ரோ, வைஃபை வேரியண்டின் 6 ஜிபி/128 ஜிபி மாடலுக்கு CNY 2,599 (தோராயமாக ரூ.30,000) முதல் தொடங்கி, 5 ஜி வசதியுடனான 8 ஜிபி/256 ஜிபி பதிப்பிற்கு CNY 3,699 (சுமார் ரூ. 42,400) வரை விலைகளை கொண்டுள்ளது. இதன் இந்திய வெளியீடு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Views: - 281

0

0